கேட்டை
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு உங்கள் நட்சத்திரத்திலிருந்து இரண்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணர்ந்து வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.
பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.
கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பரிகாரம்: பெருமாளை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்னை தீரும்.