மூலம்
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஏழாவது நட்சத்திரத்திலிருந்து உங்கள் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறுபக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.
குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.
கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும்.
மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்னைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.