பூராடம்
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஆறாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி ஏழாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதற்கேற்றவாறு எதைச் செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண்பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களைக் கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.
கலைத்துறையினர் நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை அதிகரிக்கும்.
மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாகப் படிப்பது நல்லது.
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்னைகள் தீரும்.