அவிட்டம்
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி நான்காவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கப்பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.
குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கித் தருவீர்கள்.
பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.
கலைத்துறையினர் தங்கள் வேலைகளை கவனமாக செய்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு பணவரத்து தாமதமாகலாம்.
மாணவர்கள் மிகவும் கவனமாகப் பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.