புனர்பூசம்
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பன்னிரெண்டாவது நட்சத்திரத்திலிருந்து பதிமூன்றாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: கற்பனைக் கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசாலித்தனம் நிறைந்த புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.
மாணவர்களுக்கு பாடங்கள் எளிதாகப் புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வர மன அமைதி கிடைக்கும்.