பூசம்
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினொன்றாவது நட்சத்திரத்திலிருந்து பன்னிரெண்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: எதைச் செய்தாலும் அதில் லாபம் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடைய பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்றவர். இந்த குரு பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்னையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும்.
தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.
பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும்.
அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்கள் பிரச்னைகள் அகலும்.
மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்திரத்தை தினமும் படித்து வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.