1, 10, 19, 28
02.09.2017 முதல் 04.09.2018 வரை
நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் தன்வசப்படுத்தும் திறமை கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் குடும்பத்தில் தம்பதிகளிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்கள், உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் தவிர்த்து விடுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் கூடவே கூடாது. புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். சந்தான பக்கியமும் கிட்டும்.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் என்னதான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிப்படுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள். எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியிலிருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும்.
எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகளும் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு, அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாமல் போகலாம். நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனாலும் பணவரவுகளிலும் திட்டங்களிலும் நெருக்கடிகள் குறையும். பெண்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டிய காலகட்டம். தேவையற்ற வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு உற்றார், உறவினர்களும் வீண்பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். பணிபுரிபவர்களுக்கு தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும்.அரசியல் துறையினருக்கும் இக்காலகட்டம் கொஞ்சம் சிரமத்தை தருவதாக இருக்கும். பெயர், புகழைக் காப்பாற்றிக்கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களையும் சரிவர செய்து முடிக்க விடாமல் உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.
மாணவ, மாணவியர் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். உடல்நல பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது. நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவது சிறந்தது.
கலைத்துறையினர் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். வீண் பழிச்சொற்கள் உண்டாகலாம். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சொகுசு வாழ்விலும் பாதிப்பு ஏற்படும். ஆனாலும் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும்; சமூகத்தில் அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கப்பெறும். வில்வ தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 5, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன்.