2, 11, 20, 29
02.09.2017 முதல் 04.09.2018 வரை
பொறுமையும், நிதானமும் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே, நீங்கள் அமைதியாக இருந்து எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்.
இந்த குரு பெயர்ச்சியில் கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படலாம். பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலங்களை அடையமுடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளால் சில விரயங்கள் தோன்றும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தடைகளுக்குப்பின் கிட்டும். நீங்கள் நல்ல உழைப்பாற்றல் கொண்டவர்கள் என்பதால் எந்தவித பிரச்னைகளையும் சமாளித்து திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்குள்ள வேலைப்பளு குறையும். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் துறையினர் எதிர்நீச்சல் போட்டு ஏற்றத்தைப் பெறமுடியும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் சில நேரங்களில் தட்டிச் சென்றாலும், அடுத்தடுத்து கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளிடமும் உழைப்பாளிகளிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களை சந்தித்தாலும் லாபங்கள் குறையாது. பெரிய முதலீடுகளை போட்டு செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதிக உழைப்பு அவசியமாகிறது. பெண்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு தென்பட்டாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியே இருக்கும்.
உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளை, போராடியே முடிக்க வேண்டிவரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும். மாணவ மாணவியர் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைவதுடன் பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்து சேர்த்துக்கொள்வது நல்லது.
விளையாட்டுப் போட்டிகளின்போது சிறுசிறு காயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனம் தேவை. சுற்றுலா செல்லும்போதும், உயரமான இடங்களுக்கு பயணிக்கும் போதும் எச்சரிக்கை அவசியம். கலைத்துறையினருக்கு உடன் இருப்பவர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆனாலும் போட்ட ஒப்பந்தங்களில் நல்ல லாபங்கள் அமையும். உடல்நலம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து செயல்பட முடியாத மந்தநிலை என ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்திலும் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்படுத்தும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. எதைப் பேசினாலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
பரிகாரம்:
துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்; செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் தும் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 7, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.