3, 12, 21, 30
02.09.2017 முதல் 04.09.2018 வரை
சீரியசிந்தனையும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே, யார் தயவும் இன்றி சொந்தக் காலில் நின்று மூன்னேற வேண்டும் என துடிப்பவர்கள் நீங்கள். இந்த குருபெயர்ச்சியில் சுபிட்சமான நிலையும், சந்தோஷமும் நிலவும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். உற்றார், உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களும் நடைபெறும். சிலர் விரும்பிய வரையே கைபிடித்து மகிழ்வர். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளும் அதிகரிக்கும். கடன்கள் குறையும். புதிய மனை, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும்.
பொருளாதார நிலை உயரும்.உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத வகையில் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்களும் குடும்பத்தோடு சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையும் உயர்வடையும். உடன் பணிபுரிவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். தொழில் துறையினர் எதிர்பார்த்த நல்ல லாபத்தினைப் பெறமுடியும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாகவும், உள்நாட்டிலும் நல்ல லாபம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.
பெண்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றக் கூடிய பொற்காலமாக அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள், சேர்க்கைகளும் உண்டாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் நடைபெறும். பணியில் உயர்பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் அமோகமான ஆதரவினைப் பெறமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த பதவிகளைப் பெறமுடியும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரினை எடுக்க முடியும். மாணவ, மாணவியருக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள்.
கல்வி ரீதியாக மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் கிட்டும். கலைத்துறையினர் எதிலும் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவினை உண்டாக்கும். உங்களின் உடல்நலம் மிகவும் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைதோறும் நவகிரக குருவிற்கு மூக்குக்கடலை மாலை சாத்தி ஆறுமுறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்தந்தையரின் உடல்நலம் சிறக்கும். துளசி தளங்களை அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு சமர்ப்பித்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் குரவே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 5, 6.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வியாழன்.