5, 14, 23
02.09.2017 முதல் 04.09.2018 வரை
தன்னம்பிக்கையே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிகாட்டி என்பதை மற்றவர்களுக்கு தங்களது செயலால் உணர்த்தும் ஐந்தாம் எண் அன்பர்களே, நீங்கள் எதிலும் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். எந்த வேலை செய்தாலும் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இந்த குருபெயர்ச்சியில் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறைய நேர்ந்தாலும் அது உடனடியாக சரியாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எதையும் வாங்கி அனுபவிக்க தடைகள் உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அலைச்சல் ஏற்படும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்ல பழகிக் கொள்வது நல்லது. சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை பிறர் எளிதில் தட்டிச் செல்வார்கள். எவ்வளவுதான் உழைத்தாலும் திறமைக்கேற்ற பலனை அடைய முடியாது.
பிறர் செய்யும் தவறுகளுக்கும் சிலநேரங்களில் வீண் பழியை சுமக்க வேண்டியிருக்கும். ஊதிய உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் ஓரளவுக்கு ஒத்துழைப்பாக நடந்துகொண்டால், உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் சற்று மந்தமான நிலை நிலவினாலும், பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். நிறைய போட்டி பொறாமைகள் ஏற்பட்டு வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவும். கூட்டாளிகளிடமும் வேலையாட்களிடமும் சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
கணவன்மனைவியிடையே ஒற்றுமை நிலவினாலும் உற்றார், உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். பணிபுரிவோர்க்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதோடு வேலைப்பளுவும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே மதிப்பிருக்கும். மக்களின் ஆதரவை தடையின்றி பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்யவேண்டிய சூழ்நிலையும் அலைச்சல்களும் உண்டாகும்.மாணவ, மாணவியர் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.
ஞாபகமறதியால் எல்லா வகையிலும் பாதிப்படைவீர்கள். சிலருக்கு தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற நட்புகளைத் தவிர்த்தால் வீண் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். கலைத்துறையினருக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினைப் பெறமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்னைகள் சற்றே குறையும். உடல்நலம் மேம்படும். சோர்வு நீங்கி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்:
புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஆறுமுறை வலம்வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய், தந்தையரின் உடல்நலம் சிறக்கும். துளசி இலைகளை அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் நமோ நாராயணாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 5, 6.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வெள்ளி.