6, 15, 24
02.09.2017 முதல் 04.09.2018 வரை
பிறரிடம் நல்அன்பை வெளிப்படுத்தும் ஆறாம் எண் அன்பர்களே, உங்களின் மென்மையான குணத்தால் அனைவரையும் கட்டிப்போட்டுவிடுவீர்கள். அனைவரையும் எளிதாக நம்பும் வெள்ளைமனம் கொண்டவர்கள் நீங்கள். இந்த குருபெயர்ச்சியில் கணவன்மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். அழகான புத்திர பாக்கியமும் கிட்டும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். புதிய வீடு கட்டும் திட்டங்களும், புதிய வீடு மாறும் வாய்ப்பும் உண்டாகும். பொன், பொருள் சேரும். இதுவரை பகைமை பாராட்டிய உற்றார், உறவினர், நண்பர்கள் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு பொருளாதாரநிலை சிறப்பாக அமையும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர் பதவிகளைப் பெற முடியும். இதுநாள்வரை இருந்து வந்த பணிச்சுமைகளும், வீண்பழிச் சொற்களும் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். உங்களின் திறமைகளை உயரதிகாரிகள் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். உடன் பணிபுரிபவர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். போட்டி பொறாமைகள் யாவும் விலகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் இருந்த பிரச்னைகள் விலகி சுமுகமான நிலை உண்டாகும். அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு உடல்நலத்திலிருந்த பிரச்னைகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் தீரும். பொன், பொருள், ஆடை ஆபரணம் சேரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி பதவிகள் தேடிவரும். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே நல்ல கௌரவம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். மாணவ, மாணவியருக்கு கல்வியிலிருந்த மந்தநிலைகளும், தடைகளும் விலகுவதால் பல சாதனைகளைச் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
கல்விக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கலைத்துறையினருக்கு உடல்நலத்திலிருந்த பிரச்னைகள் யாவும் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். உங்களுக்கிருந்த கடன் பிரச்னைகளும் படிப்படியாக விலகும். தொழிலிருந்த மந்தநிலை, போட்டி, பொறாமை யாவும் மறையும். உடல்நலம் அற்புதமாக அமையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வலிமை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் மற்றும் வயதில் மூத்தவர்களும் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருப்பார்கள். கடந்த காலங்களில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
பரிகாரம்:
மல்லிகை மலர்களைத் தொடுத்து அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘‘ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 6, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.