7, 16, 25
02.09.2017 முதல் 04.09.2018 வரை
அனைவருக்கும் சமநீதியை வழங்கும் ஏழாம் எண் அன்பர்களே, உங்கள் மனதில் பட்டவற்றை மிகத்தெளிவாக அடுத்தவரிடம் வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்கள் நீங்கள். இந்த குரு பெயர்ச்சியில் தம்பதிகளிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் குடும்பத்தில் வீண் பிரச்னைகளை உண்டாக்கலாம். திருமண சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். பணவரவுகள் தாராளமாகவே இருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று வேலைப்பளு அதிகரித்தாலும் உயர்வுகள் தடைப்படாது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்தால் பெயர், புகழுக்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும். ஊதிய உயர்வுகள் உண்டாவதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உடன் பணிபுரிவர்களை அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் நிறைய உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளமுடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் சிறுசிறு மன சஞ்சலங்களை சந்திப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். அபிவிருத்தி பெருகும்.
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். எவ்வளவுதான் நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தாலும் பிறர் உங்களைக் குறை கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் அனுசரித்து நடப்பது போன்றவற்றால் ஓரளவுக்கு சாதகப்பலனைப் பெறமுடியும். வேலைப்பளு கூடும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் செல்வாக்கு குறையக் கூடிய காலமாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உயர்பதவிகள் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு உடல்ரீதியாக உண்டாகக் கூடிய பிரச்னைகளால் கட்சிப் பணிகளைத் தொடர முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாணவ, மாணவியர், கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. படிப்பில் நாட்டம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்னைகளை சந்திப்பீர்கள். இரவு நீண்டநேரம் விழித்திருப்பது கூடாது. கலைத்துறையினர் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்தால் கடன்களைத் தவிர்க்கலாம். போட்டிகள் அதிகரிக்கும். வீண்பழி, செலவுகள் ஏற்படலாம்.
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சிலநேரங்களில் நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்னைகளால் மனநிம்மதி குறையும்.
பரிகாரம்:
குலதெய்வத்தை தினமும் வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 6, 7, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.