8, 17, 26
02.09.2017 முதல் 04.09.2018 வரை
அயராத உழைப்பினாலும், தளராத முயற்சியினாலும் வெற்றிபெறும் எட்டாம் எண் அன்பர்களே, இந்த குருபெயர்ச்சி காலத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடும் என்பதால் மிகவும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் வீண் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
உத்தியோகத்தில் கௌரவமான பதவிகளில் இருப்பவர்கள்கூட சிலநேரங்களில் வீண் பழிச்சொற்களுக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும்.
உடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பணிச்சுமை கூடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் என்பதால் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரிகளுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிவரும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. வரவேண்டிய வாய்ப்புகளை போட்டிகளால் பிறர் தட்டிச் சென்றாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே மேன்மையடைவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவற்றால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும் பணவரவு சுமாராக இருக்கும். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள சற்று பாடுபட வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் பதவிகளை சரிவர நிர்வகிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற நிறைய இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்யலாம், கவனம் தேவை. மாணவ, மாணவியர் கல்வியில் சற்று கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. சோர்வும், ஞாபகமறதியும் உண்டாவதால் கல்வியில் ஈடுபாடு குறையும்.
தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்கள் வாழ்வின் திசையையே மாற்றிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. அனாவசிய பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்த நேரிடும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெறுவீர்கள். ஒருமுறைக்கு இருமுறை படிப்பது சிறந்தது. கலைத்துறையினர் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபத்தினை அடைய முடியாது. எனவே எதிலும் சிந்தித்து செயல்படவும். பணவரவு சுமாராக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை உண்டாக்கும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. உடல்சோர்வு, கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறு, ஜீரணமின்மை போன்றவற்றாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம்.
பரிகாரம்:
அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வணங்குவது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். சர்க்கைரைப் பொங்கல் செய்து சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் ஐந்து முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 5, 6, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.