9, 18, 27
02.09.2017 முதல் 04.09.2018 வரை
எதிலும் நேர்மையையும் நியாயத்தையும் கொண்டு வழிநடக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே, உங்கள் குறிக்கோளும் சிந்தனையும் சிதறாதபடி நேராகவே இருக்கும். நீங்கள் வைக்கும் குறி பெரும்பாலும் தப்பாது. இந்த குரு பெயர்ச்சியில் கணவன்மனைவியிடையே உண்டாகக் கூடிய தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவதோடு இல்வாழ்விலும் நாட்டமின்மை ஏற்படும். சுகவாழ்வு பாதிப்படையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் என்றாலும் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உங்களிடம் உதவிகள் பெற்றவர்கள்கூட உங்களைப் பாராட்டுவதற்கு பதில் பின்னால் தூற்றுவார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களிலும் வீண் பழிகளைச் சுமப்பீர்கள். பணவரவுகளில் ஏற்றத்தாழ்வான நிலையிருக்கும். மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். எதிர்பாராத விரயங்கள் உண்டாகக் கூடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும். திடீர் இடமாற்றத்தால் புதிய மொழி, புதிய இடம் என அலைச்சல்கள் ஏற்படும். கௌரவமான பதவி உயர்வு கிடைக்கப் பெற்றாலும் அதிகநேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிம்மதியினை உண்டாக்கும். உடன்பணிபுரியவர்கள் ஓரளவுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களுக்கு தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபத்தைப் பெறமுடியும் என்றாலும் பெரிய முதலீடுகளைச் செய்யும்போது சறுக்கல்களைச் சந்திப்பீர்கள். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு சவாலாக அமையும். விடாமுயற்சியும் மனதைரியமும் கொண்டு முன்னேற்றம் பெறுவீர்கள்.
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மட்டுமே மற்ற காரியங்களை எளிதில் முடிக்கமுடியும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண சுபகாரியங்கள் நடைபெற்றாலும் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையுடன் வாழமுடியும். பணிபுரிவோர்க்கு வேலைப்பளு கூடும். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காலமிது. மக்களின் ஆதரவைப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களுக்கு பள்ளம் தோண்டுவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கிருந்த மதிப்பும் மரியாதையும் குறையும். எந்தவொரு முயற்சியிலும் தடைகளையே சந்திப்பீர்கள். மாணவ, மாணவியர் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். உறக்கமின்மை, உடல் சோர்வு போன்றவற்றால் ஞாபகசக்தி குறையும். குடும்பச் சூழலும் உங்கள் படிப்பில் நாட்டமின்மைக்கு ஒரு காரணமாக அமையும்.
தேவையற்ற பொழுதுபோக்குகள் மற்றும் நண்பர்களின் சேர்க்கைகளாலும் மதிப்பெண் குறையும். முயற்சியுடன் படிக்கவும் பயணங்களில் கவனம் தேவை.
கலைத்துறையினர் தொழிலில் பெரிய தொகைகளைச் செலவிடும்போது சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளாலும் மருத்துவச் செலவுகளை செய்ய நேரிடும். கொடுக்கல், வாங்கலில் வாக்குறுதிகளை தவிர்த்து விடுவது நல்லது. எதிர்பாராதவகையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையும் அவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கூறமுடியாது. எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை உண்டாகும். தேவையற்ற பிரச்னைகளால் மனநிம்மதி குறையும். மனக்கட்டுப்பாடு அவசியம்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.