1, 10, 19, 28
9/2/2021 4:33:10 PM
தனித்துவமாக தன்னை தெரிய வேண்டுமென்பதற்காக உள்ளத்தில் நினைத்ததை அப்படியே வெளிப்பாடு செய்வதால் சிலரின் எதிர்ப்புகளுக்கு ஆளாவர். மேலும் யார் அறிவுறுத்தினாலும் கண்டு கொள்வதே இல்லை. வளைந்து கொடுத்தல் என்பது வராத ஒன்று, குரலும் ஓங்கியே ஒலிப்பதால் இவர்கள் ஒரு ‘‘நாட்டு ராஜா’’ போன்றவர்கள். எந்த பணியிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படுதல் நல்லது. 1,10,19,28 தேதிகளில் பிறந்தவர்களும், பெயரில் முதல் எழுத்தாக A,I,J,Q,Yயை பெற்றவர்களும், ஒன்றாம் எண்ணில் பெயர் அமைந்தவர்களும், விட்டதை பிடிக்க வெகுவாக உழைத்தாலும் அகப்படுவது என்னவோ ‘‘எள்’’ அளவே என்ற கணக்கில் தான் இருக்கும். இருப்பினும் தங்களின் தன்னம்பிக்கை தன் ‘‘டிராக்கில் நன்மைகளை நிச்சயம் தரலாம்.’’
பொருளாதாரம் : கையில் உள்ள ஆதாரம் கரைந்தலும் கவனத்துடன் செயல்பட்டு கட்டுக்குள் வைத்துக் கொள்வீர்கள். சகோதரர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் ‘தன்மானம்’ என்ற பெயரில் தத்தளித்துக் கொண்டு வந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம். அரசாங்க ஆதரவு என்பது எழுதியுள்ள தேர்வுக்கு விடை வெளிவராமலிருப்பது போல் தான் எனவே வேறு வழியில் முயற்சிகளை முன்னெடுத்தல் நலம்.
மங்கள நிகழ்வுகள்: மனதிற்கேற்ற வரன்கள் அமையப் பெற்று திருமண காரியங்களை திருப்திகரமாக முடித்து விட நீங்கள் எடுத்த முயற்சிகளை, மீண்டும் எடுக்க நேரிடும். எனவே வரன் வீட்டார்களுடன் ‘வரம்பு’ மீறி எதையாவது பேசி வைக்காமல் இருக்க வேண்டும். எந்த செயல்பாடுகளிலும் அவசரம் காட்டாமல் மென்மையான போக்கில் செயல்பட்டால் மேன்மை நிச்சயம் உண்டு.
உடல் நலம்: மனமும், உடலும் மகா உயர்வுடன் இருந்தாலும், நீங்களாகவே சோர்வுடன் உள்ளதாக கற்பனை செய்து கொள்வீர்கள். உணவுப் பொருட்களில் கவனம் தேவை. சூடானவைகளை தவிர்ப்பது நல்லது. தந்தையார் நலனில் கூடுதல் கவனம் தேவை, கண் மற்றும் கை கால்களில் வலி ஏதேனும் ஏற்பட்டாலும், வழி மாறி வந்து விட்டது போல் உடனே சென்று விடும் எதற்கும் அஞ்சேல்.
தொழில் அதிபர்கள் : புதிய ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் ஏற்கனவே முயற்சித்தவைகளை முடித்துக் காட்டும் நேரம் இது வெளிநாட்டு வர்த்தகங்கள் விளையாட்டுக் காட்டலாம் உஷாரா இருங்க. கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள், உயர்வகை உணவகங்கள், கமிஷன் துறையினர், எலக்ட்ரானிக்ஸ் துறை, பால் பொருட்கள், ஏற்றுமதியாளர்கள் சகஜமான முறையில் வருமானத்தை பெருக்கி கொள்ளலாம். தொழிலாளர்களால் சற்று பிரச்னைகளை ஏற்படுத்திக் கொள்ள நேரிடும் கவனம். மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்கள் மகத்தான வருமானத்தை பெறலாம்.
பணியாளர்கள்: தங்களது திறமைக்கு ஏற்ற வருமானம் வரவில்லையே என புலம்பலாம், இருப்பினும் உங்களது நீதியும், நேர்மையும் நேரம் வரும் போது கவனிக்கப்படும். உயர் அதிகாரிகள் மூலம், சக ஊழியர்கள் மூலம் ஜாமீன் போன்ற வகையில் சட்ட சிக்கல்களை சந்திக்கலாம். மேலதிகாரிகளிடம் தேவையற்ற பேச்சுக்களை அறவே நிறுத்துங்கள்.
அரசியல் வாதிகள்: தலைமைக்கும், தங்களுக்கும் சற்று பிணக்குள் வரலாம். கூட இருப்பவர்கள் போட்டுக் கொடுத்து இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவார்கள். ‘மைன்ட்’ வாய்ஸ் என்று ஏடாகூடமாக தலைமையை வெளியில் விமர்சித்து மாட்டிக் கொள்ள வேண்டாம். பகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளையும், தேவைகளையும் நன்கு அறிந்து அதற்கான முயற்சிகள் மூலம் மக்கள் செல்வாக்கை அதிகரிக்க முடியும்.
கலைஞர்கள் : இக்காலக் கட்டங்களில் எடுக்கும் அதிகமான முயற்சிகள் எதிர் காலத்தில் வெகுவான உயர்வுக்கு காரணமாக அமைந்திடும். வெளிநாட்டு வாய்ப்புகள் மிக விரைவில் வரலாம். அரசாங்க பாராட்டுகளுக்கு எதிர்பார்த்து மாறிப் போகலாம். இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு அனாவசிய செலவுகளை குறைத்து கொள்வது நலம். புதுப் புது நண்பர்கள் மூலம் புகழும், பணமும் வரும் என்று நம்புவதற்கான கால நேரம் இது இல்லை கவனம். குடும்பத்தாருடன் ஆன்மீக பயணம் செல்வீர்கள்.
பெண்கள் : மேன்மையான குணம் கொண்ட நீங்கள் அக்கம், பக்கம், மாமனார், மாமி, கணவருடன் நன்கு நிதானமாக வார்த்தைகளை அளந்து பேச வேண்டிய நேரம், எச்சரிக்கை நற்குணவதிகளே. தாயார் வழி சொத்துக்கள் வந்து மகிழ்ச்சி தரும், உடன்பிறந்த பெண்களுக்கு நல் வழிகாட்டப்படும். திருமணம், வேலை வாய்ப்பின் மூலம், கோயில், யோகா, நடைப் பயிற்சிகள் மூலம் தங்கள் நல் மனதை மேலும் தூய்மைப்படுத்திக் கொள்ள நல்ல தருணம் இது.
மாணவர்கள்: எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி, தூதரக கல்வி, சிவில், மற்றும் பொறியியல், அழகு கலை முடித்தவர்கள் பதவிகளைப் பிடித்து பண பலனை பெற சரியான நேரம் இது. ‘ஆன்’லைன் தேர்வாளர்கள் எக்காரணம் கொண்டும் மாற்று வழிகளை தேர்வு செய்ய வேண்டாம். அதிகாரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து நற்பெயர் பெறுவீர்கள் மாணவர்கள்.