2, 11, 20, 29
9/2/2021 4:34:18 PM
‘அகங்குளிர முகம் மலரும்’ என்பது போல எப்பொழுதும் தன் முகத்தை மகிழ்வுடன் வைத்துக் கொள்ளும் கலை இவர்களுக்கு கை வந்தது, எப்பொழுதும் எவரிடத்தும் அன்புடன் செயல்படும் இவர்கள் பலராலும் விரும்பப்படுவர். 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் R,K,B யை முதல் எழுத்தாக பெயரை கொண்டவர்களுக்கும் 2ம் எண்ணில் பெயர் வைத்துள்ளவர்களுக்கு இந்த மாதம் ஒரு இனிமை காலமாக துவங்க உள்ளது. எளிதான முயற்சிகள் மூலம் எக்கு, தப்பாக எல்லா வழிகளிலும் உயர்வுகள் நிச்சயிக்கப்படலாம்.
பொருளாதாரம்: விருப்பம் போல் அதிகமான வருவாய்க்கு வழி காண்பர், பல்வேறு துறைகளில் வருமானம் வந்து மகிழ்வூட்டும். குறிப்பாக ஜவுளி, நகை, மருந்து, அரசாங்கம் மூலம் எதிர்பாராத வகையில் முடக்கங்கள் ஏற்பட்டாலும் ஏற்றுமதி மூலமும், உணவகங்கள், சிறு வணிகம், இரும்பு பொருட்களாலும் அனேக உயர்வுகள் உண்டு. வராக்கடன் தொகைகள் எல்லாம் வந்தாலும் திடீர் செலவுகளும் அதிகரிக்கும்.
மங்கள நிகழ்வுகள்: நீண்ட நாள் கை பிடிக்க கனவுக்கண்ட காதலர்களுக்கு தங்கள் எண்ணங்கள் ஈடேறும் காலம் வந்து விட்டது எனலாம். தாய்வழி உறவுகள் மிகவும் அன்யோன்யமாக வந்து நட்பு காட்டுவர், புதிய வாகனம், ஜவுளி, நகை போன்றவைகளை வாங்கி மகிழ்ச்சி அடையலாம். நினைவிலேயே இருந்த நிலம் தங்களுக்கு சொந்தமாக்கப்படும். பெற்றோர்களிடம் மிகவும் இணக்கமாக நடந்து மங்கள நிகழ்வுகளில் தடையில்லா சான்று வாங்குவதில் வல்லமை படைத்தவர்கள் நீங்கள்.
தொழில் அதிபர்கள்: ஜவுளி, பால் பொருட்கள், குளிர்பானம், வாகன தயாரிப்பு, லாட்டரி, ரேஸ், அழகு சாதனப் பொருட்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் அதிரடியாக தொட்டவை எல்லாம் வருமானமாக பெறப் போவது உறுதியாகிறது. வெளிநாட்டு ஒப்பந்தங்களும் கை கொடுக்கலாம். சாலையோர கடை நடத்துவோர், வேடிக்கை, வினோத பொருட்கள், காய்கறி, உணவு பொருட்கள், ஜவுளி, நகை கடை நடத்துவோர் அதிகமான ஆதாயம் பெற்று மகிழ்வுறுவர்.
அரசியல்வாதிகள் : தொகுதி மக்களின் குறிப்பறிந்து செயல்பட்டு அவர்கள் காட்டும் செல்வாக்கை நிலை நாட்டிக் கொள்வீர்கள். பெண் தலைமைகள் மூலம் பெரிய அளவில் நன்மை நிச்சயம், தக்க தருணத்தில் சரியான ஆலோசனைகளை வழங்கி தலைமையாக உள்ளவர்கள் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்வீர்கள். இதனால் கூட இருப்பவர்கள் பொறாமை கொள்வர். புதிய கான்ட்ராக்ட்டுகள், வேறு வகையான வழிகாட்டுதல்களைப் பெற்று பண பலனை அதிகரித்துக் கொள்வீர்கள்.
பணியாளர்கள்: எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை தனது சொந்த வேலையாக கருதி உரிமையுடன் செயல்பட்டு அதிகாரிகளின் நட்பை பெறுவீர்கள். இதனால் வராமல் கிடந்த கடன் தொகைகள், ஊதிய நிலுவைகள், கேட்ட இடமாறுதல் எல்லாம் கிடைக்க வாய்ப்பு வாரி வழங்கப்போகிறது. இதனால் உற்சாகமாக பணியாற்றி நிலுவை பணிகளை உடனடியாக ஒரே மூச்சில் முடித்துக் காட்டி பாராட்டு பெறுவீர்கள். உழைப்பால் உயர்வு நிச்சயம் என்பதை அனுபவிக்கும் நேரம் இது.
உடல் நலம் : அடடா, அற்புதமான மனநிலை, மகிழ்வான உடல் நிலை, பெரியோர்களின் வாழ்த்துக்கள் எல்லாம் கிடைத்து ஏக போகமாக இருப்பீர்கள். வசந்த காலம் இது தானோ என்ற மனநிலை தரலாம். வீட்டில் துனைவி, குழந்தைகள், பெரியோர்களின் நிலையும் நிச்சயமாக மகிழ்வாகவே இருக்கும். தோல் சம்மந்தமானவை, கைகால் வலி இருந்தாலும் மகிழ்வான நிலையில் மற்றவை மனதில் கூட நிற்காது.
கலைத்துறையினர்: சரியான வாய்ப்புக்களுக்காக ஏங்கி கிடந்தது போக, வரிசையாக வந்து வாசல் கதவை தட்டும் நேரம். தெரிவு செய்வதில் தட்டு, தடுமாறிப் போகலாம் கவனம், பெண் கலைஞர்கள் பெரிதும் உதவுவார்கள். தொலைக்காட்சி துறையினருக்கு தொடர்ந்து மெகா வாய்ப்புகள் வந்து தங்களின் பொருளாதார நிலையை நேர்சீர் செய்து நிலைப்படுத்தலாம். புதிய வாகனம், நிலம் மூலம் அந்தஸ்தை அதிகரித்து கொள்வீர்கள்.
பெண்கள்: குடும்பப் பெண்களின் குதூகலத்திற்கு குழந்தைகள் பெரிதும் உதவிகரமாக இருப்பார்கள். கணவருடன் அப்படி, இப்படி இணக்க குறைவு இருந்தாலும் அதையும், சமாளித்து சகஜ நிலைக்கு கொண்டு வந்து காட்டுவதில் வல்லவர் நீங்கள், பணிக்கு செல்லும் மகளிருக்கு அதிகாரிகளின் பாராட்டும், பண வரவுக்கு வழிகளும், சக பணியாளர்களின் இணக்கமும் இனிமையான வாழ்விற்கு வழிகாட்டுதலாக அமைந்துவிடும்.
மாணவர்கள்: எந்த வகை கற்பித்தலையும் கவனமாக கேட்டு, அறிந்து வெளிப்பாடு செய்யும் சக்தியை அதிகரிக்கும் காலம் இது. எனவே எந்த பதிலையும் நன்கு அறிந்து செயல்பாட்டிற்கு வருவதால் பெற்றோர், ஆசிரியர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள், அரசாங்க பதவிகள் தானாக வந்து சேரலாம். 9ம் எண்ணில் பிறந்தவர்களால் சிறிய பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிடும் (ஒன்றுக்கு, இரண்டு முறை அனாவசியமாக வம்புக்கு உங்களை இழுத்தால் அவர் இந்த எண்ணுக்கு உரியவராக இருக்கலாம்.)