4, 13, 22, 31
9/2/2021 4:37:10 PM
எங்களிடம் வாங்க நாங்க இருக்கோம் உங்களுக்கு நல்ல ஆலோசனை சொல்ல, முற்றிலும் விலையில்லாமல் என்று யாரும் கேட்காமலே பலருக்கும் நல்லது செய்ய நினைப்பவர்கள் இவர்கள், எப்பொழுதும் மிகுந்த ஆர்வத்துடன் பிறரிடம் பேசி அசத்தும் இவர்கள் வேறு யாரேனும் இவர்களுக்காக பேசுவதை நின்று கேட்க கூட நேரம் இருக்காது. அடிக்கடி பிரயாணப்பையுடன் அலையும் இவர்கள் இந்த மாதம் ஒரே இடத்திலிருந்து பணிகளை மேற்கொள்வது தான் நல்லது. குறிப்பாக 4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்களும், D,T,M ல் முதல் எழுத்தாக பெயரில் பெற்றவர்கள் 4ம் எண்ணில் பெயர் அமைந்தவர்களும் இந்த மாதத்தை மணிக் கணக்கில் எண்ணி தள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
பொருளாதாரம்: நல்ல முயற்சி அதற்கேற்ற பண பலன் என்பது மட்டும் நிச்சயம், விருப்பம் போல் வெகுவான முறையில் படாடோபமாக செலவுகள் செய்வது என்பது இயலாது. எப்பொழுதுமே கரைந்தாலும், குறைந்தாலும், நிறைந்தது போல வெளியில் காட்டிக் கொள்ளும் பக்குவம் என்பது உங்களுக்கு மட்டுமே உரித்தானது. குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக சற்று திண்டாடி பிறகு தைரியமாகி விடுவீர்கள். வெளி உலகில் சென்று வெகுவாக சம்பாதித்த நீங்கள் உள்ளூரிலேயே ஒவ்வொன்றையும் அளந்து செலவிடும் நேரமாக உள்ளது ‘இக்கணம் சிக்கனம்’ தான் அருமருந்தாக அமைந்திடும்.
மங்கள நிகழ்வுகள்: மனதில் விரும்பியது போல் மாப்பிள்ளையை தேர்வு செய்து விடலாம் என்று எண்ணிய பெண் வீட்டு பெரியவர்களுக்கு அடுத்த பக்கத்திலிருந்து பெண்ணுக்கு கல்வியின் தரம் அதிகமாக உள்ளது. அல்லது மிகவும் குறைவாக இருக்கிறது என பதில் வரலாம். அசராதீர்கள் இந்த நேரத்தில் ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற ஃபார்முலா உதவிடும். தந்தையார் வழி உறவுகள் தங்கள் தரத்தை பதம் பார்த்தாலும், தாயார் வழி உறவுகளால் தாங்கள் எதிர்பார்த்ததை அளவில் மகிழ்வான நிலைக்கு காரணமாக அமைந்திடுவர்.
தொழில் அதிபர்கள்: நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற மன நிலையில் சற்று ‘ரெகு லேட்டர்’ வைத்து மெதுவாக செயல்படவும், அவசரம் காட்டி அயல்தேச ஒப்பந்தங்கள், உள்நாட்டு உயர்வான நிறுவனங்கள் கையெழுத் திடுவது போன்றவற்றால் ஏதேனும் சட்ட சிக்கல்கள் எழலாம் கவனம். புகழ் பெற்ற நீங்கள் பொறுமையையும் கடைப்பிடித்தல் இந்த நேரம் இனிமையான பிற்காலத்திற்கு வழிகாட்டும் வகையில் அமைந்திடும்.
அரசியல் வாதிகள்: அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தொந்தரவு தாலாமல் தலைமையிடம், ஏற்று செயல்படுத்த இயலாத சில சிபாரிசுகளை கொண்டு சென்று வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். எது சட்ட, திட்டங்களுக்கு இயல்புடைய பணிகளே அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆத்திரப்பட வேண்டாம் அந்த நேரத்தில் அகன்று விடுவதே சிறப்பாகும்.
பணியாளர்கள்: எண்ணெய், நிலக்கரி, எலக்ட் ரானிக்ஸ், எலக்டரிகல்ஸ், கலைத்துறையில் பணியாற்றுவோர்கள் தங்களின் தரம் தானாக உயர்த்தப்படுவதை அறியலாம், எப்பொழுதும் நன்மைகள் மட்டும் நம்மை அடைவதை வந்து சென்ற பின் தான் அறிய முடியும். ‘கடிகார சின்ன முள்’ போல, தீமைகள் திடீரென தாக்குவதால் உடனே தெரியும், கடமையை கண்ணும் கருத்துமாக பணியாற்றும் இடத்தில் செய்வதுடன் மேலதிகாரிகளிடம் மிகவும் கவனமாக நடப்பதும் நல்லது.
உடல் நலம்: எல்லாம் எனக்கு தெரியும் என்று கூறும் இவர்கள் தன் உடல் நலத்தில் அக்கறை கொள்வதே இல்லை. ஓடும் வரை ஓடட்டும், நிற்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையினர் இதற்கு இவர்களிடம் உள்ள ‘மனோ வலிமையே’ எண்ணத்தை ‘டியூன்’ செய் வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே இதனால் எதைப் பற்றியும் கவலைப்படுவதே இல்லை. காலம் கடந்த உணவுகள் கடும் நெருக்கடிகளை வயிறுக்கு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கலைத்துறையினர்: நடிப்பும், துடிப்பும், படிப்பும் ஒன்று சேர இயற்கையால் பெற்ற கலைத் துறை நாயகர்களே’ என்னே நடிப்பு என்பது யாராலும் கண்டு பிடிக்காத அளவிற்கு தங்கள் திறனை வெளிப்பாடு செய்து மிகப் பெரிய நிர்வாகிகளை தங்கள் ரசிகர்கள் ஆக்கிவிடுவீர்கள். அயல்தேச ஒப்பந்தங்கள் வந்தால் அப்படியே நம்பி விட வேண்டாம், பெண் கலைஞர்களின் சில சிபாரிசுகள் மூலம் மிகப் பெரிய வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பக்குவமாக சக ஊழியர்களிடமும், அதிகாரிகளிடமும் நடப்பது நல்லது. வாய்ப்பேச்சில் வம்புகள் இலவசமாக வந்து வறுத்தெடுக்கும் உஷார், புதிதாக நகை வாங்குவீர்கள். திருமண வயதில் உள்ளவர்கள் மனதிற்கேற்ற வரன் கிடைக்கப் பெறுவர். குழந்தைப் பேறு இல்லாத சிலருக்கு மழலைகள் கிடைக்கலாம். ‘ஆண்’ வர்க்கத்திடம் மதிப்பும், மரியாதைகளுடன் நடந்து நற்பெயர் பெறுதல் அவசியம்.
மாணவர்கள்: கற்று விட்டேன், எல்லாவற்றையும் கரைத்து குடித்து விட்டேன் என கர்ஜிக்கும் மாணவர்கள் பல நேரங்களில் மறதியால் குழப்பமடைவர். எனவே எதையும் முறையாக பயிற்சி எடுத்து மனதில் வைத்தால் வெற்றி உறுதியாகும். படிப்பும் அப்படித் தான் என்பதை மனதில் பதிவு செய்து கொண்டு செயலுக்கு வாருங்கள் மாணவர்களே.