5, 14, 23
9/2/2021 4:38:15 PM
தேனான பேச்சு, திகட்டாத நற்செயல்கள், சாதுர்யமான செயல்பாடுகள் பிறர் கஷ்டப்பட்டு தங்கள் பணிகளை ஒப்படைக்கும் படியான சுறு சுறுப்புக் கொண்ட பலராலும் எளிதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த 5,14,23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், E,H,N,X என்ற எழுத்துக்களை பெயரில் முதலாவதாக பெற்றவர்களுக்கும், 5ம் எண்ணில் பெயர் அமைந்தவர்களுக்கும் இந்த மாதம் முழுக்க நிரம்பி வழியப் போகிறது. நிரந்தரமான பல நன்மைகள் மனதில் பட்டது எல்லாம் மகத்துவமாக ஆரம்பமாவதால் இனி எல்லாம் சுகம்.
பொருளாதாரம்: அதிரடியான பல மாற்றங்களை வணிக ரீதியாக செய்து, ஒன்றன் பின் ஒன்றாக செயல்பாட்டிற்கு வருவீர்கள். இதன் பிரதி பலனை பல நாட்களிலே பெற்று வாங்கியிருந்த கடன்கள் எல்லாம் வரிசையாக அடைத்து மன தளவில் நான் தான் மகா ராஜா என்று மகிழ்ச்சி கொள்வீர்கள். இரும்பு, நிலவிற்பனை ஏற்றுமதி, இறக்குமதி மூலம் வருவாய் வந்து கொண்டே இருக்கும்.
மங்கள நிகழ்வுகள்: வரன்கள் எதிர்பார்த்ததை விட வரிசையாக வந்து நிற்கப் போகிறார்கள். செலக்ட் செய்வதற்குள் அசதியடையப் போகிறீர்கள். தாய் வழி உறவுகள் ஏற்கனவே ஏற்பட்ட பிரச்னைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு பின் தொடரப் போகிறார்கள் உங்களை, ஏனெனில் உங்களின் உயரிய தயவு உடனடியாக தேவைப்படும் நிலையில் இருப்பது புலப்படுகிறது. காந்தர்வ மணமும் சிலருக்கு நடந்தேறும் (குழம்ப வேண்டாம் தூய தமிழில் காதல் மணம்)
தொழில் அதிபர்கள், வியாபாரிகள்: அரசாங்க கவுரவங்கள் பல தொழில் அதிபர்களுக்கு கிடைத்திடும். ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் நிலை எதிர்பாராத ஏற்றங்களை அடைய உள்ளது. கேட்டு வைத்து பெருந்தொகைகள் தனியார், அரசாங்கம் தயாராகி விட்டது. டெக்ஸ்டைல், தங்கம், பிளாஸ்டிக் பொருட்கள், பருப்பு வகைகள், எலக்ட்ரானிக்ஸ் போன்ற வியாபாரிகள் விற்பனை பெருக்கம் பெற்று ஏற்றத்தை பெறுவார்கள்.
அரசியல் வாதிகள்: எவ்வளவு தான் அழகாக பேசினாலும் தலைவர்களிடம் தங்கள் ஜம்பம் எடுபடவில்லையே என ஏங்கிய தங்களுக்கு இனிமேல் ஜாக்பாட் தான், நீங்கள் ஏற்கனவே கொடுத்த ஆலோசனைகள் மூலம் தலைமைக்கு தடாலடியாக மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. இதனால் தங்கள் நிலையும் உச்சம் பெறுவது நிச்சயம். பகுதி மக்களால் பலவாறு புகழப்படுவீர்கள். அவர்கள் குறைகளை எல்லாம் நிறைவாக்கி மகிழ்வீர்கள் உறுதியாக.
பணியாளர்கள்: தேனீக்கள் போன்று எப்பொழுதும் ரீங்காரமிட்டு திறம்பட தனது பணிகளை செய்த உங்களுக்கு தேனில் தினை கலந்த உணவு போல பல்வேறு வகையில் அதிகாரிகளால் அள்ளி வழங்கப்படும் பதவி உயர்வு களும், கேட்ட இடத்திற்கான மாறுதல்களும், பண பலன்களும் ஏக போகமாக வந்து சேரும். தனியார் துறைகளிலும் தங்கள் திறமைகள் பாராட்டுப் பெறும். சக ஊழியர்கள் மத்தியில் நிலையான செல்வாக்கை நிலை நாட்ட உள்ளது.
உடல் நலம்: பரபரப்பாக இயங்கும் நிலையில் செயல்பட தயாராகி விட்டது. தங்களின் உறுதியான மனமும், உடலும், தாயார் நலம் காக்கப்படும் பெண், குழந்தைகள் நலமும் நன்றாகவே இருக்கும். ஆன்மிக பயணங்கள் மூலம் அதிகமான மன நலம் அதிகரிக்கும். தோல் சம்மந்தம், சர்க்கரை, கண் சம்மந்தமாக சிறிதளவில் சிரமங்கள் இருந்தாலும் சாதாரணமாக அகன்றுவிடும்.
கலைதுறையினர்: வெளிநாட்டு ஒப்பந்தங்கள் நினைத்தபடி வந்து வழிகாட்டும், தொலைக்காட்சி துறையினருக்கு பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். தடுமாறப் போறீங்க எதை பிடிப்பது என்பதில். அரசாங்க ஆதரவும் அதிகரிக்கும். உறைவிடமில்லாமல் திரிந்த பல உப்புமா நிறுவனங்கள் ஆசை காட்டினாலும் எளிதில் அடையாளம் கண்டு ஒதுங்கி விடுவதில் கில்லாடிகள் நீங்கள், அதனால் அவர்களிடமிருந்தும் தப்பிவிடலாம்.
பெண்கள்: பெருமையும், புகழும், பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெற்று மகிழ்வீர்கள். பெண் குழந்தைகளால் மன நிலையில் மகத்துவம் பெறுவீர்கள். கணவரின் கரிசனம் குறைந்தாலும் பெரியோர்களின் அரவணைப்பு மனதிற்கு மகிழ்வு தரும் நிச்சயம். தாயார் வழி சொத்துக்கள் எதிர்பாராத வகையில் வந்து பொருளாதார நிலையை உயர்த்தலாம். பணிக்கு செல்வோர் அவ்விடங்களில் வெகுவான பாராட்டுக்களை குவித்து பலராலும் பாராட்டுப் பெறுவர்.
மாணவர்கள்: கற்று முடித்த இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், அழகு கலை, மருத்துவம், கடல் சார்துறை, சட்ட துறை மாணவர்கள், பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப் போகிறது. எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கண் பார்வை ஒன்றிலேயே ‘ஸ்கேன்’ செய்து படிப்பதில் கெட்டிக்காரர்கள் என்பதை ‘ஆன்லைன்’ தேர்வில் மதிப்பெண்கள் அள்ளிக் குவித்ததில் இருந்தே நம்பலாம் அவ்வளவு திறமையாளர்கள் இந்த மாணவர்கள்.