6, 15, 24
9/2/2021 4:39:23 PM
நினைப்பவை எல்லாம் நிரந்தரமாக்கப்படும் இந்த வேலையில் நல்லவைகளை மட்டும் நினைத்து மகிழ்வு கொள்ளவும் எல்லா வகையிலும் நன்மையாகவே உள்ளது. மக்கள் செல்வாக்கு, வீட்டிலுள்ள அங்கத்தினர்களின் ஆதரவு, அக்கம், பக்கத்தினரின் அன்பு, இயற்கையாக பல நன்மைகள் வரலாம். இந்த 6,15,24 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் I,J,V,W ஐ பெயரின் முதல் எழுத்தாக பெற்றவர்களுக்கும், 6ம் எண்ணில் பெயர் அமைந்தவர்களுக்கு இந்த மாதம் தன் சொந்த மாதம் என்பது போல கனவுகள் எல்லாம் கனிந்து நனவாகும் என்பதே நிச்சயம்.
பொருளாதாரம்: எப்படி வந்தது என்று அறியும் முன்பே அடுத்தது வந்து மகிழ்வூட்டும் வகையில் பொருளாதார நிலை இருக்கும், புதுமையான வழிகள் மூலம் வருமானம் அதிகரிக்கும் ரேஸ், லாட்டரி போன்ற ஸ்பெகுலேசன் மூலமாக திடீர் தன வரவுகள் மடை திறந்த வெள்ளம் போல் வரும் கிரிப்போ கரன்சி’ என்ற வகையில் கிறு, கிறுக்கவைக்குமளவிற்கு பண பலம் ஏறும் (சில வகை வரவுகள் நம் நாட்டில் தடையில் உள்ளது கவனம்) உணவகங்கள், சாலையோர கடைகள், கலை பொருட்கள் விற்பனையும் கை கொடுக்கும்.
மங்கள நிகழ்வுகள்: மாங்கல்ய நிகழ்வுகள் மதிப்பு மிகுந்த வகையில் நடந்தேறும் நினைவுகள் நனவாகும் நேரம் காதலர்களுக்கு, வீட்டு தடைகளும் காலத்தின் கட்டாயம் விலகி விடுமாதலால் எல்லாம் மகிழ்வாகவே அமைந்திடும், அம்மா வழியில் அடிக்கடி ஏதேனும் ஒருவகையில் உயர்வளிக்கும் வகையில் வருமானம் பெருகும், கை நிறைந்த வரவுகள் புதிய சொந்தங்கள் மூலம் உறுதி செய்யப்படும். நிலம், வீடு, ஆபரணமும் அசத்தி விடும் தங்கள் நிலைதனை எனலாம்.
தொழில் அதிபர்கள்: துவங்கிய தொழில்கள் எல்லாம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் முண்டியடித்துக் கொண்டு முதல் நிலைக்கு தங்களை உயர்த்திடும் காலம் தான் இது. குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி, ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி, ஆலோசனை மையங்கள், ஏற்றுமதியாளர்கள், இரும்பு போன்ற துறையில் உள்ள தொழில் முனைவர் தொடர்ந்து தங்கள் ஒப்பந்தங்கள் உள்நாட்டிலும் சரி, உலகளாவிய அளவிலும் சரி சகட்டு மேனிக்கு ‘சக்சஸ்’ நிலையிலேயே வைத்து வருமானப் பெருக்கத்தை காண்பர்.
அரசியல்வாதிகள்: அன்புடன் அனைவரிடமும் நடந்து அனைவரின் பாராட்டுதல்களையும் தொகுதி மக்களிடம் பெற்று விடுவீர்கள். குறிப்பறிந்து குறைகளை களைவதில் வல்லவர். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் எதிர் நோக்கிய பெரியளவிலான கான்ட்ராக்ட்டுகள் தங்களுக்கு வழங்கப்பட்டு பொருளாதார ஏற்றத்திற்கு வழிகாட்டலாம்.
பணியாளர்கள்: பல வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு பார்த்து முடித்துக் காட்டுவதால் சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும், தலைமையிடத்தில் தனி பிரியமும் ஏற்படும், வேண்டிய விரும்பிய இடத்தில் மாறுதல்களும், பதவி உயர்வுகளும், பண பலன்களும், ஏற்கனவே ஏற்பட்ட சட்ட சிக்கல்களில் இருந்து விடுதலையும் விரும்பியபடி மகிழ்வாகவே அளிக்கப்படும், குடும்பத்தாருடன் மனதில் நினைத்தது போல் ஆன்மீக பயணங்களும், நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கும் சென்று மன நிறைவைப் பெறுவீர்.
உடல் நலம்: மனதில் மட்டற்ற மகிழ்வினை தரும், குடும்ப அங்கத்தினர்களின் உடல் நிலை வழியில் தோல் ஒவ்வாமை, கண் பிரச்னைகள், கால் வலி போன்றவை தோன்றி மறைந்திடும், எந்தவித தொல்லையும் தராமல், நடைப் பயிற்சியால் நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்பதை கண் கூடாக உண்வீர்கள். தாயார் வழி உறவுகள் மூலம் தங்கள் நலத்திற்காக நல்ல செய்திகள் வந்து மகிழ்வு தரலாம்.
கலை துறையினர்: நிகழ்காலம் ஒரு நிரந்தரமான காலமாக மாற்றப்படும், அயல்தேச ஒப்பந்தங்கள், புதுப்பட கமிட், பெரியபேனர் வாய்ப்புகள் என எல்லாம் உயர்வு மயம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அதிரடி வாய்ப்புகள் வந்து வளம் பெற செய்திடும், மகளிர் மக்களால் பெரிய அளவிலான வாய்ப்புகள் ஆண்கலைஞர்களுக்கும், ஆண் வர்க்கத்தினரால் பூவையருக்கு வாய்ப்புகளும் வந்து புகழும், பொருளும் வழங்கப் போகிறது. இதனால் தங்கள் வாழ்க்கை தரமே உயர்ந்துசெல்லப் போகிறது தயாராகுங்கள்.
பெண்கள்: பணிக்கு செல்வோர் அந்தஸ்து பொருட்கள் வாங்கி குவிப்பர். அலுவலகத்தில் அலையோ, அலை என அலைந்து திரிந்தும் கிடைக்காத, வீட்டு கடன், வாகன கடன் போன்ற வை உடனே ‘சாங்சன்’ ஆகப்போகிறது. அதிகாரிகளிடமும் அசத்தலான நற்பெயர் பெறும் வகையில் தங்கள் பணி அமையப் போகிறது. பிறந்த வீட்டு பெருமையை மிகவும் நாசூக்காக எடுத்து சொல்லி புகுந்த வீட்டில் புகழ் பெறப் போறீங்க, தங்களது பெண் குழந்தையால் பெருமை கிடைக்கப்போகிறது.
மாணவர்கள்: கல்வியில் கண்டு பிடிக்க முடியாத வகையில் உயர்வுகள் உண்டு. கற்று முடித்து பணிக்கு தயாராக உள்ள முன்னால் மாணவர்கள் மிகவும் பெரிய பண பலத்தை தரும். பணிகளை அயல்தேசத்திலோ, அருகாமையிலோ பெற்று மகிழ்வீர்கள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்வியிலும், விளையாட்டு துறையிலும் புகுந்து ‘சிக்ஸர்’ அடிக்கப் போறீங்க. மதிப்புமிகு மாணவர்களே.