7, 16, 25
9/2/2021 4:40:35 PM
மிகவும் உயர்ந்த பண்பும், பிறரிடம் காட்டும் இரக்கமும், உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் பக்குவமும், நளினமான நடவடிக்கைகளும் தொடர்ந்து நற்பெயரை நாடு முழுக்க கொண்டு வந்து சமர்ப்பிக்கும் உங்களுக்கு இந்த மாதம் உங்கள் விருப்பங்கள் எல்லாம் வரிசையாக வந்து மிகப் பெரிய மகிழ்ச்சியை வழங்கப்போகிறது. 7,16,25 தேதிகளில் பிறந்திருந்தாலும் O,Z என்ற முதல் எழுத்தை தன் பெயராக பெற்றவர்களுக்கும், 7ம் எண்ணில் ெபயர் எண் அமைந்தவர்களுக்கும் எடுத்துக் கொண்ட காரியங்களில் எல்லாம் வெற்றி என்ற வகையில் அமைய உள்ளது. மலையளவு மன மகிழ்வு வந்து மட்டற்ற வகையில் மகிழ்வினை வாரி வழங்கிடும்.
பொருளாதாரம்: நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள வெகுகால முயற்சிகள் அவ்வளவும் அதிரடியாக பணத்தை பன்மடங்கு கொண்டு வரப்போகிறது எனலாம். பணம் பல வழிகளில் வந்தாலும் நல்வழியில் மட்டும் செலவுகளால் செய்து வங்கிகளில் தனது இருப்புக்களை காட்டிக் கொள்வீர்கள். ஏழ்மையில் உள்ளோர், ஆதரவற்றோர் போன்றோர்களின் காவலன் என்று பெயர் எடுப்பதில் பெருமிதம் கொள்வீர்கள். உணவுப் பொருட்கள் உணவகங்கள், எலக்ட்ரானிக்ஸ் துறை மூலம் முழுமையான வருமானத்தை பெற்று மகிழ்வீர்கள்.
மங்கள நிகழ்வுகள்: எதிர்பார்த்த வரன்கள் வந்து மங்கள காரியங்கள் சுற்றும், நட்புக்கள் மூலம் மன மகிழ்வுடன் நடந்தேறும். பல்லாண்டு களாக குழந்தை இல்லாதோருக்கு மழலைகள் வந்து மகிழ்வூட்டும் காலநேரம் இது. புதிதாய் நிலம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களும் வந்து மதிப்பையும், மரியாதைகளையும் மட, மட வென தந்து மகிழ்விக்கும்.
தொழில் அதிபர்கள்: கலைத்துறையினர்களுக்கும், எலக்ட்ரிகல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்களும், ரியல் எஸ்டேட் துறையினருக்கும், கன்சல்டன்சி நடத்து வோருக்கும், ஏகப்பட்ட வருமானம் வந்து உங்களின் வாழ்க்கை தரத்தையே உயர்வு செய்திடும். உயர்வகை நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்கள், அசைவ உணவகங்கள் மூலம், அற்புதமான பொருளாதார ஏற்றம் வந்து சேரலாம். சற்றும் சளைக்காமல் சாலையோரக் கடைகள் வைத்திருப்போர் வருமானத்தை பெருக்குவதில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு நினைத்தது போல செய்து காட்டுவர்.
அரசியல்வாதிகள்: போட்டு வைத்த எதிர்கால கனாக்கள் எல்லாம் எப்படி இப்படி நனவானது என நினைத்து, நினைத்து பெருமை கொள்ள வைத்திடும், ஏற்றமான பதவிகள் வந்து மக்கள் செல்வாக்கை மடங்கு கணக்குகளில் கூடுதலாக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி நெருடல்கள் எல்லாம் மிக எளிதாக தீர்க்கப்பட்டு நிம்மதியடைவீர்கள்.
பணியாளர்கள்: தங்களின் திறமையான செயல்பாடுகள் அதிகாரிகளின் பார்வைக்கு செல்லும். எனவே உடனே அதற்கு பலனும் கிடைக்கும். உண்மையான பணிபற்று பெருமைகளை நிச்சயம் தேடி தரும். சக ஊழியர்களும் மிக்க இணக்கத்துடன் இருப்பது, மனதிற்கு இதமாக அமைந்திடும், மனுக் கொடுத்து மனதளவில் என்னே உலகம் என விரக்தியுடன் இருந்த உங்கள் நிலைமை முற்றிலும் மாறி மகிழ்ச்சியை பன் மடங்கு வழங்கும் வகையில் கேட்டதெல்லாம் கிடைக்கப் போகிறது அலுவலகத்தில்.
உடல் நலம்: மகிழ்வான நிலையில் தான் உள்ளது. உடல் வலிமை, ஆனால் ஏதோ இல்லாத ஒன்றை ஒன்பதாக்கி மகிழ்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே. கவலை வேண்டாம். மனப் பயிற்சி அவசியம், எல்லாம் நல்லதாகவே நடக்கும். முறையான அங்கப் பயிற்சிகள், மனோ பயிற்சிகள் மிகச் சிறப்பான நிலைதனை நிலைநாட்டும் தொடருங்கள்.
கலைத்துறையினர்: வரும் காலம் மிகப் பெரிய ‘வசந்த காலமாக’ அமைய உள்ளது. திரைப்பட துறையினரின் திறமைகள் திடீரென வெளிக் கொணரப்பட்டு புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்வு தரும். ஏற்கனவே ஒப்பந்தமான சில நிறுவனங்கள் கூடுதல் பணம் கொடுத்து மீண்டும் தங்கள் தயவை நாடலாம். பெண் கலைஞர்கள் பெருமையும், புகழும், பணமும் பெற்று சொகுசான தங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் கொள்வர். ஸ்டேஜ் அமைப்பாளர், நாட்டுப்புற கலைஞர்கள், கட்டிடக் கலையினர். ஆடை வடிவமைப்பினர் வெகுவான பொருளாதார ஏற்றமடைவர்.
பெண்கள்: மென்மையான மகளிர் மக்களுக்கு இனி வரும் காலங்கள் அனைத்தும் மேன்மையாகவே அமைந்திடும். பிறந்த வீட்டு பெருமைகளை நாசூக்காக புகுந்த வீட்டில் சொல்லி நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் கூடுதல் மகிழ்ச்சி அடையலாம். விரும்பிய வாகனம், நிலம், புதுமையான பொருட்கள் எல்லாமும் பெற்று பெருவாழ்வு வாழலாம். வேலைக்கு செல்வோர் தங்கள் லைஃப் ஸ்டைலையே மாற்றி மற்றவர்களை பொறாமைப்பட செய்திடுவர்.
மாணவர்கள்: தங்களின் திறனை மேலும் வௌிப்பாடு செய்திடும் வகையில் தரமான கல்வியை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் எளிதில் வந்து சேரலாம். அயல்தேச ‘ஆன்’லைன் வகுப்புகள் மூலம் அசத்திவிடும் பல விசயங்களை கற்று பிறருக்கு கிடைக்காத மேன்மைகள் பலவற்றை தனதாக்கி உயர்வு பெறுவர். பெற்றோர், ஆசிரியர்களிடமும் நன் மதிப்பை தக்க வைத்துக் கொள்வர் கல்விக் கண்மணிகள்.