8, 17, 26
9/2/2021 4:41:40 PM
எட்டாததையும் எட்டிப் பிடித்துக் காட்டும் விடாமுயற்சி கொண்ட இவர்கள் தன்னை பொது வாழ்வில் இணைத்துக் கொள்வதால் புகழும், பொருளும், மக்கள் அபிமானத்தையும் ஒருங்கே பெற்று உயர்வுறுவர் நிச்சயம். பிறர் மீது தனது ஆதிக்கத்தை அன்றாடம் செலுத்த விரும்பும் 8,17,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், 8ம் எண்ணில் பெயர் எண்ணை பெற்றவர்களுக்கும், P,F என்ற முதல் எழுத்தை பெயரில் பெற்றவர்களுக்கும் இந்த மாதம் தங்கத்தினுள் வைரத்தை வைத்தது போல, வந்து சேரப்போகிறது. எண்ணற்றமுறை முயன்றும், கிடைக்காத பல நல்ல காரியங்கள் மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது மகிழ்வுறுங்கள்.
பொருளாதாரம்: எல்லா முயற்சிகளும் ஏற்றத் தை மட்டுமே தரும் காலமாக அமைவதால் நினைத்தது போல் நிரந்தர வருமானத்திற்கு வழியும், புகழையும், செல்வாக்கையும் ஒரு சேர தந்து மகிழ்விக்கும், அதிரடியாக பலருக்கு அள்ளி விட்டு அமர்க்களப்படுத்தி அண்டை, அயலாரை விழிபிதுங்க வைத்து தங்கள் பொருளாதார நிலையை காட்டி விடுவீர்கள். கையிருப்புகளை பக்குவமாக சேமித்து வைத்துவிடுவீர்கள். ஏழை, எளியோர், முதியோர்களுக்கு தேவையானவற்றை தெரிந்து ஆர்வத்துடன் அவர்களுக்கு அளித்து அன்பை பெறுவீர்கள்.
மங்கள நிகழ்வுகள்: பல காதல் ஜோடிகளுக்கு ‘பம்பர்’ பரிசு போல பெரியோர்களின் ஆசியும் கிடைத்து திருமணம் வரை சென்று ‘செட்டில்’ ஆகிவிடலாம். பெண் குழந்தைகளுக்கு வீட்டில் பார்த்த வரன்களின் வருகை மீண்டும் ஒவ்வொன்றாக வந்து களைகட்டும், குறிப்பாக பெற்றோர்கள் வரும் வரன்களின் முதல் எழுத்தாக A,I,J,Q,Y அமைந்திருந்தால் அக்கம் பக்கத்தில் சல்லடை போட்டு சலித்து முடிவெடுப்பது வேண்டாத விசயங்கள், வருவதை முன் கூட்டியே தடுத்திட உதவிகரமாக நிச்சயமாக அமைந்திடும்.
தொழில் அதிபர்கள்: அதியாவசிய பொருட்களின் உற்பத்திக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைத்திடும். தனி நபர்கள் தொழில் அபிவிருத்திக்கு எதிர்பார்த்த உதவிகளை தருவார்கள். அரசங்க விசயங்கள் ஏதோ ஒரு காரணத்தால் ‘கிணற்றில் போட்ட கல்’ ஆகவே இருக்கலாம். தங்களின் உற்பத்தி பொருட்கள் மார்க்கட்டில் சாதகமான வாய்ப்பை தரும். புதிய முயற்சிகளும் எந்த தடைகளும் இல்லாமல் செவ்வனே நடந்திடும் வெகு சிறப்பாக.
அரசியல் வாதிகள்: முன்னேற்றமான காலக்கட்டம் இது. புதியதாக சாலை, கட்டிடம், உணவு, சார்ந்த பொருட்களுக்கான ஒப்பந்தங்கள் உயர்வான உங்களின் நடவடிக்கைக்காக அரசாங்கம் வழங்கிடும். எதிர்பார்த்த ஏற்றத்தை பொருளாதார வகையில் பெற்று மகிழ்வீர்கள். சில பெரிய அரசியல் பதவிகள் கூட தங்களை வந்து அலங்கரிக்க அதிகமான வாய்ப்புள்ளது. மக்கள் செல்வாக்கும் மள, மளவென ஏறுமுகமாகவே தென்படுகிறது.
பணியாளர்கள்: சிறப்பரிய செயல்கள் மூலமாக செய்திடும் வேலைகளில் வெற்றிக்கொடி நாட்டுவர், மேலதிகாரிகளிடம் மிகவும் இணக்கமாக நடந்துகொள்வதால் தனக்கு வேண்டிய காரியங்களுடன் சக ஊழியர்களின் வேலைகளையும் மிகவும் எளிதில் முடித்து நற்பெயர் பெறுவர். பலர் அதிகாரிகளுக்கே ஆலோசனைகள் கூறி தனது புகழை உயர்த்திக்கொள்வர். மனதில் துணிச்சல் உண்டாகும். விண்ணப்பித்து விளையாட்டுக் காட்டிய பல விசயங்கள் தானாக கனிந்து வரும். எனவே பணியில் இருக்கும் அரசாங்க, தனியார் ஊழியர்களுக்கு வளமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
உடல் நலம்: நல்ல மனநிலையும், வளமான உடல்நிலையும் மனதளவில் ‘லாட்டரி’ அடித்தது போன்ற மகிழ்வினை தரும், ஒவ்வாமை மட்டும் ஒரு சில நேரம் வந்து போகும். இதனை தவிர்க்க உணவுக் கட்டுப்பாடுதான் சாலச்சிறந்தது ஆகும். வீட்டிலுள்ள பெரியோர்களின் நலன் நல்ல நிலையில் செயல்படும். திட்டமிட்ட உணவுகளால் திடமான உடல் வலிமையைப் பெறமுடியும் என்பதை உணரும் நேரம் இது.
கலைத்துறையினர்: வரும் காலம் வளமானதாக அமைந்திடும். திரைப்படம், தொலைக்காட்சி கட்டிடக் கலை போன்ற துறையினர் பாராட்டுக்களையும், பணத்தையும் பன்மடங்கு பெறும் காலம் இது. எடுத்த காரியங்களில் எந்த தடையும் இல்லாமல் செயலுக்கு வந்து மகிழ்வூட்டும். பெண் கலைஞர்களின் பொற்காலம் இதுதான், அதிகமான ரசிகர்களின் ‘லைக்குகளால்’ லைஃப் ஸ்டைலே மாறி விடும். அந்த அளவிற்கு தங்கள் தனித் திறமையை வெளிப்பாடு செய்வீர்கள்.
பெண்கள்: வேண்டி விரும்பி காத்திருந்த வாகனமும், வீடு கட்ட நினைத்தவர்களுக்கு அந்த அதிர்ஷ்டமும், புதுமை பொருட்களை வாங்கி குவிப்பதுமாக ஒரே குதூகலம்தான். பார்த்துக்கொண்டிருக்கும் பணி அப்படியே வேறு துறைக்கு மாற்றி விடலாம் அதுவும் பெரிய நன்மையாகவே முடியும். குடும்பத்தினரும் மிகவும் ஒற்றுமையுடன் நடந்து மகிழ்ச்சியை தருவர். பூர்வீக சொத்துக்கள் கூட வந்து தகுதியை கூடுதல் தரப்படுத்தலாம் சிலருக்கு.
மாணவர்கள்: கற்று முடித்த எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், ஏற்றுமதி, இறக்குமதி கல்வி, கடல் சார்ந்தவை, கட்டிட பொறியாளர்கள் அதிர்ஷ்டகரமான நிலையை பெறுவர். விளையாட்டிலும் வீரம் காட்டி அரசாங்க ஆதரவை அள்ளிக்கொண்டு போகலாம். தொழில்நுட்ப அறிவும் திறமையும் மெகா கம்பனிகள் மூலம் வேலை வாய்ப்பிற்கு உதவிகரமாக அமைந்திடும்.