9, 18, 27
9/2/2021 4:42:49 PM
அயராத உழைப்பு, ஆர்ப்பரிக்கும் செயல்பாடுகள், இஷ்டத்திற்கு செயல்பாடுகள் என தனது முத்திரையை முதன்மைப்படுத்திக் கொள்ளும் 9,18,27 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், 9ம் எண்ணில் பெயர் எண் அமைந்தவர்களுக்கும் இந்த மாதம் எவரையும் எதிர்கொள்ளும் மனஉறுதியும், மக்கள் மத்தியில் மாறாத செல்வாக்கையும், அரசாங்க ஆதரவையும், அயல்தேசத்தவரின் அன்பையும் ஒருங்கே பெற்று உயர்வடைவார்கள், தனது பேச்சின் அக்கினி குழம்மை சற்று சாந்தப்படுத்தினால் அகிலமே போற்றிடும் இவர்களை.
பொருளாதாரம்: ஏற்கனவே தங்களின் கூடுதலான முயற்சிகளில் ஏற்பட்ட தொழில் முட்டுக்கட்டைகளில் பின்னடைவுகள் பெரும்பாலும் விலகி வெற்றிக்கான வழிகளைக் காட்டும், எலக்ட்ரிகஸ், எலக்ரானிக்ஸ், ஸ்டேசனரி இன்ஜினியரிங் பொருட்கள், உணவகங்கள், ஜவுளி துறையில் கூடுதலான வருமான வாய்ப்புகளை பெறுவர். ஏற்றுமதியாளர்கள் கடும் முயற்சிகள் மூலமே பயன் பெறமுடியும். வரும் வாய்ப்புகளில் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும், ‘கை நிறைந்த காசு’ இதற்கான வாய்ப்பு வரும் வரை அமைதி காப்பதே சிறப்பாக அமையும்.
மங்கள நிகழ்வுகள்: தங்கள் வசிப்பிடத்திலிருந்து வடக்கு, தெற்கு திசைகளில் இருந்து தங்கள் எதிர்பார்த்தது போலவே நல்ல மனதிற்கேற்ற முறையில் ‘வரன்’ அமையப் பெற்று ஆனந்தமடைய வாய்ப்புள்ளது. அவர்களின் பெயரின் முன் எழுத்தாக R,K,B,P,F போன்ற எழுத்துக்களில் துவங்கினால் அணு அணுவாக அலசி, ஆய்வு செய்த பின் பெரியோர்களின் முன்னிலையில் முடிவு செய்தல் அவசியம், ஏனெனில் சட்ட சிக்கல்களில் கடந்து உழல வைக்க நேரிடும் உஷார்.
தொழில் அதிபர்கள்: மந்த நிலையில் இருந்த நிலை மாறி மகத்துவமான நிலைக்கு செல்ல ஆயத்தமாகிவிடுவீர்கள். அரசாங்க அனுமதிகளுக்காக அலைந்து சோர்ந்து போன பல விசயங்கள் வீடு தேடி வந்து தங்கள் விரக்தியை போக்கும் எனலாம். ரியல் எஸ்டேட் துறையினர், கமிஷன், டெக்ஸ்டைல்ஸ், கலைத் துறையினர், மென்பொருள் உற்பத்தியாளர்கள் அதிரடி மாற்றங்களை பெற்று அதிகமான வருவாய்க்கு வழி காண்பர். தங்களின் நிலவரம் இந்த மாதம் முழுக்க ஏற்றமாகவே இருக்கும்.
அரசியல்வாதிகள்: தங்களின் ‘சாணக்ய’ தனம் பலராலும் பாராட்டுப் பெறும் வகையில் அமைந்திடும், எடுத்துக்கொண்ட காரியங்களை முடிக்காமல் விடமாட்டீர்கள். மக்கள் மத்தியில் ஏற்படும் உயர்வான பெயர்களை தாங்கி கொள்ள முடியாத எதிர்ப்பாளர்கள் எங்கே என்று தேடிப் பிடிக்கு மளவிற்கு ‘தெறித்து’ ஓடிவிடுவார்கள். மேலும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள ‘அர்த்தசாஸ்த்திரம்’ என்ற நூலை அயராது கற்றுக்கொண்டால் என்றும் வெற்றியே, தலைமையின் இணக்கம், எங்கும், சுணக்கம் ஏற்படாமல் வேலைகள் நடந்து பொது மக்களின் ஏகோபித்த பாராட்டை தனதாக்கி மகிழ்வீர்கள்.
பணியாளர்கள்: மனதில் நிம்மதி, உடன் பணிபுரிவோரின் அபிமானம், அதிகாரிகளின் அன்பு, வேலையில் துரிதம் இவைகள் இனிதே துவங்கி நடக்கும், மேலும் பெரிய அளவான வீட்டுக் கடன், வாகன கடன், எதிர்பார்த்த இடமாற்றம் எல்லாம் எங்கே அவர் என தேடி வரும் நேரமிது, எல்லா வகையிலும் ‘படிப்படியான’ உயர்வு என்பதை விட ‘பட்’ டென்று வரும் உயர்வுகளே உங்களுக்கு பிடிக்கும் என்பதை இயற்கை அறிந்துகொண்டு அது போலவே வழங்கிடும்.
உடல் நலம்: மனதில் மகிழ்ச்சி, வலிமையான உடல் நிலை, துடிப்பான செயல்பாடுகள், பெற்றோர்களுக்கும் நல்ல நிலை, குழந்தைகள் நலனும் நன்றாகவே உள்ளது. புதுமையான பயிற்சிகளால் வலிமையான நிலையை கற்றுக் கொள்வதுடன் கற்றுக் கொடுப்பதிலும் மகிழ்வடைவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்லும் போது காலங் கடந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். அலர்ஜியை ஏற்படுத்தும் விசயங்களை முற்றிலும் விட்டு விடுதல் நல்லது.
கலைத்துறையினர்: சென்ற காலங்களில் செய்திட்ட தொடர் முயற்சிகள் இப்பொழுது பலன் தர ஆரம்பித்திடும், ‘‘ஒரு சாதாரணமானவன் உயர்வடைய வேண்டுமானால், பெரிய மனிதனாக கருதப்படும் ஒருவன் உலகிற்கு ஏற்றுக் கொள்ள முடியாத வேலையை செய்வான் என்பதும் முதுமொழி. அதுபோல அங்கு ஏற்படும் வெற்றிடத்தை நீங்கள் நிரப்பிடும் வாய்ப்பு இந்த மாதம் தங்களுக்கு வழங்கப்படலாம் தயாராகுங்கள்.
பெண்கள்: அக்கறையுடன் செயல்களை துவங்கி மாமனார், மாமியார், கணவர், குழந்தைகள் என தனது குடும்ப நலன்களை மிகுந்த மன நிறைவுடனும், அக்கறையுடனும் செயலுக்கு கொண்டு வந்து உயர்வான பெயரை தக்க வைத்துக்கொள்வீர்கள். பணிக்கு செல்வோர் அவ்விடங்களில் அசத்திவிடுவீர்கள். தங்களின் புதுமைப் பணிகள் மூலம், கூடுதல் தகுதிகள்
அதிகாரிகளால் வழங்கப்படும்.
மாணவர்கள்: அல்லும், பகலும் செயல்பட்டாலும் ‘ஐம்பது பர்சன்டேஜ் மார்க் வாங்கும் மாணவர்கள் சிலர் மத்தியில் அரைமணி நேரம் புத்தகத்தை பார்த்து கவனமாக கற்றுக் கொண்டு அதிகமான மதிப்பெண்களை தங்கள் பணியில் ‘வெளிப்பாடும் செய்து வாங்கி விடுவதில் வல்லவர்கள், விளையாட்டிலும் வீரம் காட்டி அதன் மூலம் பதவிகளையும் பிடித்துவிடும் காலம் தான் இது.