அனுஷம்
01.1.2020 முதல் 31.12.2020 வரை
திட்டமிடுவதில் திறமையாக செயல்படும் அனுஷ நட்சத்திர அன்பர்களே, நீங்கள் சனி பகவானை நட்சத்திர நாயகனாகவும், செவ்வாய் பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள். இந்த வருடம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும்.
தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். மனக்குழப்பம் நீங்கும். கடன் பிரச்னை குறையும்.