திருவோணம்
01.1.2020 முதல் 31.12.2020 வரை
சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ளும் திருவோண நட்சத்திர அன்பர்களே, நீங்கள் சந்திர பகவானை நட்சத்திர நாயகனாகவும், சனி பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள். இந்த வருடம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமுகமான முறையில் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது.
கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துப்போவது நல்லது.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும்.