3, 12, 21, 30
முறையான நடவடிக்கை, முடிந்தவரை உண்மை நிலை, தன்புகழ் பாடும் நிலை, தலை சிறந்த ஆலோசகர், தேச நலனில் எப்பொழுதுமே அக்கறை கொண்ட 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக C,G,L,S, ஐ பெற்றவர்களுக்கும், 3ம் எண்ணை. பெயர் எண்ணாக உடையவர்களுக்கும். இந்த மாதம் சென்ற மாதத்தை போன்றே சிறப்புடனேயே நடைபெறும். எல்லா இடங்களிலும் மதிப்பும் மரியாதைகளும் நிச்சயமாக மன நிறைவை தரும் வகையில் இருக்கும். போட்டு வைத்த திட்டங்களில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்கள் எல்லாம் ஏற்றமாக நிலையை தருவதற்கு தயாராகி விட்டது. பொருளாதாரம்: விருப்பம் போல் பண வரவுகள் ஏற்கனவே எடுத்து வைத்த பல முயற்சிகள் மூலம் இந்த மாதத்திற்கு தேவையான வரவுகள் வந்து மனதிற்கு இதமளிக்கும். குறிப்பாக ஆலோசனைகள் மூலமும், விவசாயத்தின் மூலமும், பூர்வீக சொத்துக்கள் மூலமும் மாத நிறைவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். கடன் என்ற சொல்லை ஏட்டிலிருந்து எடுத்துவிட நல்ல முயற்சிகள் எடுப்பீர்கள், வெற்றியும் கிடைக்கலாம். மங்கள நிகழ்வுகள்: மனதில் குடிவைத்தவரை மனம் முடிக்க மங்கள கரமான நேரம் தான் இது. தந்தையார் தாண்டிக் குதித்தாலும், தாயாரின் அரவணைப்பினால் நினைத்ததை நடத்திக் கொள்வர் காதல் ஜோடிகள் நிரந்தரமாக. நீண்ட காலமாக மருத்துவர்களை நாடிய சிலருக்கு இயற்கையாகவே மழலை பேறு கிடைத்திடலாம். புதிய வாகனம் வாங்கி மகிழ வாய்ப்புள்ளது. உடல் நலம்: பலம், வலிமை, ஆனந்தம், மகிழ்ச்சி என வாயால் பேசினாலும் தனக்கு வலித்தது தனக்கு தானே தெரியும் என்ற நிலையில் தான் சர்க்கரை, ஒவ்வாமை, வயிறு பிரச்னை என்றிருந்த நிலை மாறி இயல்பான இனிமையான, மனதளவில் மகிழ்வு கொள்ளதக்க வகையில் உடல் நிலை உத்தமமாக இருக்கும். தொழில் அதிபர்கள்: உலகளாவிய அளவில் ஆலோசனை தரும். நிறுவனங்கள், திரைப்பட, தொலைக்காட்சி நிறுவனத்தினர், கல்லூரி, பள்ளி நடத்துவோர், அந்தஸ்து உள்ள சைவ உணவகங்கள், ஜவுளி, நகை தயாரிப்போர் தாங்கள் போட்டு வைத்த பல திட்டங்களை செயலுக்கு கொண்டு வந்து குவிக்க போறீங்க பொருளாதாரத்தை. வியாபாரிகள்: வியாபாரத்திலும் நேர்மை என்ற நிலையிலிருந்து என்றைக்குமே மாறாத தங்களின் உயர்குணம் பலர் மத்தியில் பரவிபுகழைச் சேர்க்க விருப்பதால் தங்களைத் தேடி வந்து நிறையபேர் பொருட்களை அள்ளிக் கொண்டு பண வரவுகளை தங்களுக்கு தருவதற்கான தக்க தருணம் இந்த மாதமாக அமைந்துள்ளது. பணியாளர்கள்:அரசாங்கத்தில் பணிபுரிவோர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை அதிகம் பெறலாம். பிறர் பணியையும் சேர்த்து பார்த்து உளப்பூர்வமாக மகிழ்வடைவர். ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருந்த வாகன, வீட்டு கடன் தொகைகள் வந்து தங்களின் நிலையை உயர்ந்த தயாராகி விட்டது என்ற சொல்லலாம். அரசியல்வாதிகள்: தலைவர்கள் தந்த வேலைகளை மிகத்தரமாக செய்து மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை குவிக்க போறீங்க, எதிர்பாராத பதவிகளும் வந்து சேரப்போகுது. புதுமையான பல திட்டங்களை மக்களுக்கு ஏற்படுத்த சுய செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்வீர்கள், U,V,W என்ற முதல் பெயர்களைக் கொண்ட நிறுவனங்கள், பிரமுகர்களிடம் கூடுதலான எச்சரிக்கையுடன் செயல்படுதல் நல்லது. கலைஞர்கள்: சில நிறுவனங்கள் நீண்ட நாள் ஒப்பந்தங்கள் மூலம் தங்களின் ஆஸ்தான கலைஞர்களாக தங்களை நியமிக்க விருப்பத்தால் தொடர்ந்த பொருளாதார ஏற்றத்திற்கு வழி கிடைக்கலாம். வெளிவட்டார புகழும், செல்வாக்கும் மன நிலையை எப்பொழுதும் மகிழ்ச்சி நிலையிலேயே வைத்துக் கொள்ளும். பெண்கள்: வெளியில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தும் அளவிற்கு செயல்பாடுகள் சிறப்பாக பேசப்படும். அருகில் உள்ளவர்களும் ஆராதனை செய்யுமளவிற்கு நற்காரியங்கள் செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். குழந்தைகளின் திருமணமும் நடத்திட நல்ல நேரமாக தெரிவதால், கணவரின் கட்டைபோடும் பேச்சுக்களை பொறுமையுடன் கேட்டுக் கொண்டு தீர்க்கமான முடிவை நீங்கள் எடுத்தால் மங்கள காரியங்கள் மூலம் குடும்பத்திற்கே மரியாதை கட்டலாம். பெற்றோர், மாமனார், மாமியாரிடம் எப்படி அன்புடன் நடப்பது என்பதை தங்களிடம் கேட்டு பின்பற்றலாம் என்றளவிற்கு பெறுவீர்கள். மாணவர்கள்: எடுத்தேன், படித்தேன், முடித்தேன் என ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேன் போன்ற வெற்றி செய்தியை தங்கள் திறன் மூலம் காட்டுவர், மேலும் படித்து முடித்து பணியை நோக்கி காத்திருப்பவர்களுக்கு உள்நாட்டிலேயே கார்பரேட் கம்பெனிகள் பல பணிகளை வழங்க வாய்ப்பு உள்ளது.