4, 13, 22, 31
அனைத்தும் கற்றுத் தேர்ந்த, நாலும் தெரிந்தவர்கள் தான் இந்த எண்ணினர், இவர்கள் உலகில் உட்பிரிவுகளாக இருக்கும் எல்லா துறைகளிலும் புகுந்து கலக்குபவர்கள் இவர்களே, இயற்கையின் பேரில் அளவில்லா ஆர்வம் கொண்டவர்கள், வரலாற்று நாயகர்கள், அரசியலாக இருந்தாலும், ஆன்மிகமாக இருந்தாலும், லவுகீகமாக இருந்தாலும் சரி, பிரம்மச்சர்யமாக இருந்தாலும் இவர்களிடம் வாய் கொடுத்து வம்பளக்க முடியாத அளவிற்கு வகை, வகையாக தெரிந்து வைத்துக் கொண்டு மடக்கி விடும் வல்லமை கொண்டவர்கள். இந்த 4,13,22, 31ம் தேதியில் பிறந்தவர்களுக்கும் D,T,M எழுத்தை முன் பகுதியாக பெயரில் கொண்டவர்களுக்கும், 4 பெயர் எண் அமைந்தவர்களுக்கு இந்த மாதம் முழுக்க பிறர் சொல்வதை இவர்கள் ஃபாலோ பண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அடக்கி வாசிக்க வேண்டியது அவசியம் நீங்கள். பொருளாதாரம்: எதிர்பார்த்த அளவு பண பலன்கள் வருவதற்கு சற்று தாமதமாகலாம். புதிய முயற்சிகளில் ஏதேனும் சற்று குறைபாடுகள் ஏற்படலாம். இதை எல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளவும், தவறினால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். கையிருப்புகள் கரைந்தாலும் தங்களின் கனிவான அனுகுமுறைகளால் வராத பாக்கிகள் கடை வந்து மகிழ்வூட்டும் உணவகங்கள், கலைத்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதுடன், ஜாமீன் கையெப்பங்கள் எவருக்கும் போட வேண்டாம் உஷார். மங்கள நிகழ்வுகள்: எடுத்த முயற்சிகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல் போன்று உள்ளதே என எண்ணிக் கொண்டு இருந்த உங்களுக்கு, திடீர் வெள்ளம் புகுந்தது போல புதிய வரன்கள் மடமட வென வரப் போகிறார்கள். தேர்வு செய்வதில் திக்கு, முக்காடிப் போவீர்கள். உடல் நலம்: மனோ பலமும், மகத்துவமான உடல் வலிமையும் உள்ள நீங்களே சோர்வடைவது தேவையற்றது. முறையான பயிற்சிகள் மூலம் அருமையான உடல் நிலையை தக்க வைக்க முடியும் காலம் கடந்த உணவுகளால் வயிறு பிரச்னைகள் வரலாம் உஷார், தாய், தந்தையர், குழந்தைகள் நலன் மிக நேர்த்தியாக உள்ளதை நினைத்து அக, மிக மகிழ்வு ஏற்படும். இதுவே புத்துணர்வு பெறுவதற்கு உறுதுணையாக அமைந்திடும். தொழில் அதிபர்கள்: கட்டுமான துறையினர், இரும்பு, சிமெண்ட், தயாரிப்பாளர்கள், வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்ததை விட ஏகப்பட்ட வாய்ப்புகளையும், வருவாயையும் அதிகமாக குவித்து மகிழ்வர். டெக்ஸ் டைல், மற்றும் நகை தயாரிப்போரும் அதிக பலன் பெறுவர். சினிமா தயாரிப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் திடீரென ஏற்ற, இறக்கங்கள் சந்திக்க நேரிடும் ஆதலால் அவசரம் காட்டாமல் எதிலும் நிதானமாக செயல்படுவதே சிறப்பாகும். வியாபாரிகள்: விவசாய இடு பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், பெண்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் வியாபார பெருக்கம் குறையலாம், சாலையோற வியாபாரிகள் தங்களின் வித்தைகளையெல்லாம் காண்பித்து பொருள் வரவுகளை பெற வேண்டிய நிலை ஏற்படும். அரசியல்வாதிகள்: தாங்கள் நினைத்தது போல நடக்கவில்லையே எனவும், மக்கள் செல்வாக்கு குறைகிறதே என்றும் மன இறுக்கம் பெற்றாலும் தொடர் முயற்சிகளால் நல்ல பலன்களுக்கு வழி பெறுவீர்கள். கூட இருப்பவர்களே குறிப்பார்த்துக் கொண்டிருப்பர். தலைமையிடம் வத்தி வைக்க, எனவே யாரிடம் பேசினாலும் அளவுடன் பேசுக. கலைஞர்கள்: எவ்வளவுத் தான் புதிய முறையில் செயல்பட்டாலும், அதற்கு முன்பே வேறொருவர் அதை செயல்படுத்தி பெயர் பெற்றுவிடுவர். எனவே தங்கள் உள் ஐடியாக்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் தண்ணீரில் எழுதியது போன்று கரைந்து போனாலும், உள்நாட்டிலேயே உயர்வுகள் காத்துக் கொண்டிருக்கிறது கவலை வேண்டாம் தொடர்ந்து செயல்படுங்கள். பெண்கள்: வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எவ்வளவு தான் இணக்கத்துடன் செயல்பட்டாலும் அதிலும் ஒரு குறைகாண்பதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பது தெரிகிறது. கோள்கள் தனது கடமையை செவ்வனே செய்வது போல், எதையும் எதிர்பாராமல் தங்கள் பணிகளை தொடருங்கள் பாராட்டுகளும், அன்பும் நிச்சயம் கிடைக்கும் அவர்களிடமிருந்து. பணியாளர்கள்: அரசாங்கம், மற்றும் தனியார் துறையினர் தங்களுக்கு வழங்கிய பணிகளை தரமாக செய்து அதிகாரிகளின் அன்பை பெற கூடுதல் முயற்சி எடுப்பதே நல்லது, ஏதேனும் பணி விசயமாக வெளியூர் சென்றால் பாதுகாப்புடன் செயல்படுதல் அவசியம், சக பணியார்களுக்கு ஏதேனும் ஜாமீன் கையொப்பங்கள் போட்டால் கடும் அவதிகளை வருங்காலத்தில் சந்திக்க நேரிடும் உஷார். பெண் பணியாளர்களிடம் வாக்கு, வாதங்கள் வேண்டாம் அதனால் தங்கள் உள்ள அந்தஸ்து அடியோடு இறங்கலாம் கவனம். மாணவர்கள்: மருத்துவ துறையினர், பொறியாளர், ஆசிரியர், வாகனம் சம்பந்தமான கல்வியின் எல்லா வகையிலும் ஏற்றம் காண்பர், கம்ப்யூட்டர், மற்றும் உணவக கல்வி படிப்போர் சக மாணவர்களுடன் ஏதேனும் மன வருத்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது கவனத்துடன் செயல்படவும்.