5, 14, 23
நிகரற்ற வல்லமையும் எதிலும் தளராத லட்சியமும், வசியம் நிறைந்த பேச்சும், ஜனமும், பணமும் தங்கள் பக்கம் தான் எப்பொழுதும் என்ற மன நிலையும், உலகளாவிய கல்வி,கேள்வி, பட்டறிவு ஞானமும், புதிரான விசயங்களை எளிதில் புரிந்து கொள்ள செய்திடும் திறனும், வேகம், விவேகம், சுறுசுறுப்பையும் கொண்ட மனித தேனீக்களான 5,14,23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் E,H,N.X ஐ பெயரின் முன் எழுத்தாக பெற்றவர்களுக்கும், 5ம் எண்ணை பெயர் எண்ணாக கொண்டவர்களுக்கும் இந்தமாதம் செல்லும் காரியங்களில் எல்லாம், சிறப்பும், மக்கள் ஆதரவும், மனதில் துணியும், மகிழ்ச்சியும் நிச்சயமாக தொடர்ந்து வந்து ஆச்சரியமூட்டும். பொருளாதாரம்: ஏற்றுமதி, இறக்குமதி, கட்டிடம் கட்டி விற்பனைக்கு விடுப்போர், வாகன உற்பத்தியாளர்கள் போன்றோர் எதிர்பார்த்தது போலவே நிலுவை தொகைகள் எல்லாம் நில்லாமல் வந்து மகிழ்வூட்டும், அதே நேரம் நிச்சயமாக வந்து விரிவாக்கத்திற்கு உதவும் என நம்பி இருந்த அரசாங்க ஆதரவில் சில சிக்கல்கள், கையொப்பங்கள், பதிவுகள் என ஏதாவது காலம் தாழ்த்தும் நிலையாகவே தெரிகிறது. தொழிலாளர் ஒற்றுமையுடன் தொடர்ந்து உற்பத்தி உருவாக்கம் காணும் இதனால் மகிழ்வே உண்டு. மங்கள நிகழ்வுகள்: எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ நினைத்து நின்று போன பலவித காரியங்கள் எந்த தடையூறும் இல்லாமல் நன்றாகவே நடந்தேறும். முடிவுறும் நிலையிலிருந்த மங்கள நிகழ்வுகளில் ஏற்பட்ட முடக்கங்கள் முழுமையாக அகன்று மகிழ்ச்சியை மனமாற ஏற்படுத்தும். உடல் நலம்: வழக்கமான பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு, போன்றவைகளால் நல்ல முன்னேற்றமான வலிமையை பெற்று ஆனந்தமாக இருப்பீர்கள். இருப்பினும் வயிறு சம்பந்தமான சில பிரச்னைகளை காலம் கடந்து உண்ணும் உணவினால் ஏற்படுத்தலாம் கவனம். தந்தையார் நலனில் அதிக கவனம் தேவை. தொழில் அதிபர்கள்: எடுத்த காரியங்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் முடித்து வெற்றிக்கு வழி காண்பர் திரைப்பட துறையினர், அரசாங்க ஒப்பந்தங்கள் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயரும், அதிகமான பணபலனும் நிச்சயக்கப் படலாம், புகழ் பெற்ற கட்டிட நிறுவனங்களின் வீடுகள் மக்களால் அதிகம் விரும்ப பட்டு வாங்கி வருமானத்திற்கு நிறுவனர்களுக்கு வழிகாட்டுவார்கள் பயனாளர்கள். ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் திடீர் பண வரவுகளால் திக்கு, முக்காடிப் போவர். வியாபாரிகள்: எதைக் கொண்டு போனாலும் விற்பனை செய்து வெகுவான அளவில் பணத்தை குவித்து வருகிறீர்களே என சக வியாபாரிகள் நினைப்பார்கள், தங்களின் நேர்மறை (Positive) எண்ணமே இதன் சூட்சுமம், இதை அறிந்து கொண்டால் எல்லாவும் ஏற்றமே, வாகன உதிரிப்பாகம், ஜவுளிக்கடை, உணவக பொருட்கள், குளிர்பானம், கட்டுமானப் பொருட்கள் மூலம் அதிகமான வருமானம் நிச்சயிக்கப்படும் இந்த மாதம். பணியாளர்கள்: பணிகளில் எந்த சுணக்கமும் இன்றி பரபரப்பாக செயல்பட்டு பலரின் அன்பிற்கும், அதிகாரிகள் ஆதரவிற்கும், மக்கள் பணியில் இருப்போர் அவர்களின் பாராட்டுதற்கும் உரித்தாகி மகிழ்வுறுவர். விண்ணப்பித்து, காத்து கிடந்த வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவை தானாக வந்து வாழ்வின் வளர்ச்சிக்கும், மக்கள் மத்தியில் புகழ்ச்சிக்கு காரணமாக அமைந்திடும். அரசியல்வாதிகள்: எந்த மாற்றங்களை நீங்கள் உங்களுக்கு எதிர்பார்த்தீர்களோ அது உங்களுக்கு வந்து அதையே பிற அரசியல்வாதிகளுக்கு நீங்களே செய்யும் நிலையில் பெரிய பதவி மிக விரைவில் உங்களுக்கு வந்து சேரலாம், பிறரிடம் தங்கள் திறமையை காண்பிக்கிறேன் என நினைத்து அதிகமாக பேசி அடுத்தவர்களுக்கு குறிப்பாக தலைமைக்கு ‘அலர்ஜியை’ ஏற்படுத்துவதை குறைத்து நிறைந்த பலனை அடைய முயற்சி செய்யுங்கள். கலைஞர்கள்: ஒப்பந்தங்கள் மிகவும் உயர்வான நிலையை தரலாம். தொலைக்காட்சி துறையினருக்கு தொடங்கி விட்டது நல்ல நேரம், நாடே அறியப் போகிறது தங்கள் முகத்தையும், பெயரையும், பெருமையும், புகழும் பிரம்மாண்டமாக வந்து வாழ்வில் வசதி வாய்ப்புகளை தரலாம். இந்த மாதம் முழுக்க முடிந்த வரை நேரடி சிவப்பு நிறங்களை தவிருங்கள் தங்கள் ஆடைகளில். பெண்கள்: பெருமைகளையும், புகழையும், பெருவாரியாக அக்கம்- பக்கத்தாரிடம் பெற்று மகிழ்வுடன் இருப்பீர்கள். குழந்தைகளால் குதூகலமுண்டு, கணவரிடம் அன்பை மட்டும் காட்டுங்கள், ஆத்திரம் வேண்டாம், அவரின் உடல் நிலையில் தகுந்த அக்கறை காட்டுங்கள். வெகுளள் காதல் விரைவில் திருமணத்தில் முடியும் சில கன்னிகையருக்கு. மாணவர்கள்: எடுத்ததை எல்லாம், முடித்துக் காட்டுவதுடன் விளையாட்டிலும் வீரம் காட்டி தங்கள் திறமைகளை தக்க வைத்துக் கொள்வார்கள், புதுமை புத்தகங்கள் மூலம் அருமையான விசயங்களை கற்று ஆன்றோர் மத்தியில் அதி திறமைசாலி என்ற பெயரை தக்க வைத்துக் கொள்வர் தங்க ‘மாணவர்கள்’.