6, 15, 24
வெற்றி என்ற சொல்லுக்கு இலக்கணமான இவர்கள் பாவம் போன்ற முகத்தையுடையவர்கள், இதனால் பிறரை எளிதில் கவர்ந்திழுத்து கொண்டவர்கள், ஆய கலைகளிலும் நாயகனான.. ஆன்மிக பாதையிலும் அற்புதமாக பயணம் செய்யக் கற்றுக் கொண்டார்கள். என்றொன்றும் குறைவில்லா செல்வ நிலையைப் பெற்றுள்ள இவர்களின் லீலைகளை எவராலும் கண்டு கொள்ள முடியாத 6,15,24 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், U,V,W, எழுத்துக்களை பெயராக பெற்றவர்களுக்கும். 6ம் எண்ணில் பெயர் அமைந்தவர்களுக்கும் இந்த மாதம். நாலுபேரைக் கேட்டு எந்த செயலையும் செய்தால் நலமாக முடியும், வெளி நபர்களிடம் விதண்டாவாதம் செய்வது சட்ட சிக்கல்களில் கொண்டு விடலாம் உஷார்.. பொருளாதாரம்: எடுத்த உடன் எகிறிக்குதிக்க வேண்டாம். நிதானமாக செயல்படுதல் மிக அவசியம். அதிகமான செலவுகளை எதிர்கொள்ள நேரிடும், வாகனம், நிலம் போன்ற வகையில் எதிர்பாராத செலவுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறலாம், மனதில் உறுதி வேண்டும். மங்கள நிகழ்வுகள்: காதல் ஜோடிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிடங்களில் செயல்படுதல் அவசியம். பலர் பல விதமாக பேசும் நேரமாகத் தெரிகிறது. ஒழுங்கும் கட்டுப்பாடும் உலகில் உன்னதமான நிலையைத் தரும் என்ற நினைவுடன் இருப்பதே நலம், பெற்றோர்கள் எதிர்ப்புகளும் எகிறிக்கொண்டே தான் இருக்கும். வரன்கள் வந்த வண்ணம் இருப்பர். பல இல்லங் களில் இருப்பினும் அவர்களும் முடிவெடுப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். உடல் நலம்: நல்லாத்தானங்க இருக்கு உடம்பு அப்படின்னு டாக்டர் சொன்னாலும் உங்க மனதுக்குள் இருப்பது உங்களுக்கு தானே தெரியும், கவலை வேண்டாம், யோகா, பிராணாயாமல், ஆன்மிக பயிற்சிகள், ஆற்றல் மிகுந்த விற்பன்னர்களின் சொற்பொழிவுகள் தங்கள் மனதை பஞ்சு போல நிச்சயம் ஆக்கிவிடும். பெற்றோர்களின் வலிமையான நலம் குறித்து மிகுந்த ஆச்சர்யமடைவீர்கள், உணவுக்கட்டுப்பாடும் அவசியம், குளிச்சியான பொருட்களை குனிந்து கூட பார்க்காதீர்கள். அவைகளால் தான் தங்களின் ‘இம்யூனிட்டி’ குறைகிறது உஷார். தொழில் அதிபர்கள்: மிகப்பெரிய தொழில் நிறுவனர்களின் பங்குகள் சற்று இளக்க நிலையைக் காணலாம், தொழிலாளர்களின் தொல்லைகளும், சங்கங்களின் சங்கடங்களையும் எதிர் கொள்ள நேரிடும், எக்காரணத்தைக் கொண்டும் வார்த்தைகளை மிகவும் அளந்து பேசி வீண் விவாதங்களைக் குறைக்கவும். குறிப்பாக நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்கள், திரைப்பட துறையினர், ஆலோசனை மையங்கள் நடத்துவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சைவ உணவகங்கள் மூலம் நல்ல பலனை எதிர் கொள்ளலாம். வியாபாரிகள்: கடல் பொருட்கள், துணிமணிகள், உணவுப் பொருட்கள், எண்ணெய் விற்பனை, சாலையோர கடைகள். வாசனைப் பொருட்கள் விற்பனை செய்வோர், அன்றாடம் தேவைக்கேற்ப விற்று பணப்புழக்கத்தை எளிதில் பெறுவர். குடும்பத்தினருடன் இணக்கமாக இருந்தாலும் ஏதேனும் இன்ஸ்ட்டால்மென்டில் பிரச்னை வரலாம். பேசாமலிருந்தால் பிழை நிச்சயம் வராது, குறிப்பாக பெண்களால் பிரச்னைகள் தலைதூக்கும் கவனம். அரசியல்வாதிகள்: அதிரடியான அரசியல் பிரபலமான நீங்கள் பல புதுமையான திட்டங்களை தன் பகுதி மக்களுக்கு அர்ப்பணம் செய்து தலைமையின் நேரடிப் பார்வைக்கு செய்வீர்கள். புதிய பதவிகள் எதுவும் வராது ஆனால் தங்கள் திறன் கணக்கிடப்பட்டு நேரம் வரும்போது செமத்தியாக (நல்ல முறையில் தான்) தலைமையில் கவனிக்கப்படுவீர்கள். கலைஞர்கள்: கடுமையான முயற்சிகள் மட்டுமே அன்றி வரவுகளுக்கு வழி கிடைக்கும். யாரையும் அனுசரித்து செல்லுதல் நல்லது. வாய் வார்த்தைகள் சில இடங்களில் பகையாக முடியும் கவனம். வெளிநாடு, உள்நாடு, பெரிய இடத்தில் ஒப்பந்தம் செய்து நிறைய வருமானம் பெறலாம் என்று .. ஒரு ‘டீம்’ வரலாம் அது டுபாக்கூர் தான் என்பதையும். உப்புமா உறவுகள் என்பதையும். கவனத்தில் கொள்ளுங்கள் கலைஞர்களே. பெண்கள்: பெண்மை என்ற மென்மையை சிலர் கடுமையாக்க முயற்சிப்பர், வேண்டு மென்றே வழிச் சண்டைகளை ஏற்படுத்தலாம். பணியாற்றும் நிறுவனங்களிலும் எச்சரிக்கையுடன் நடப்பதே நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி நிச்சயம். பணியாளர்கள்: அதிகாரிகளின் கெடுபிடிகள் சிலருக்கு அதிக எரிச்சலூட்டும், அவப்பெயர்களையும் ஏற்படுத்துவர், சக ஊழியர்களுடன் போட்ட ஜாமீன் கையொப்பங்களால் நீதிமன்றங்களில் கைக்கட்டி நிற்க நேரிடும். மக்கள் பணிகள் மூலம் நல்ல மனநிலை பெறலாம். வயது முதிர்ந்த அதிகாரிகள், பணியாளர்களிடம் எரிச்சலூட்டும் எதையும் சொல்லி வகையாக வாங்கி கட்டிக் கொள்ளும் நேரமாக தெரிகிறது. உங்கள் செல்வாக்கு உயர்வதும், சரிவதும் உங்கள் கையில் தான். மாணவர்கள்: ஆகம கல்வியாளர்கள், ஆசிரியர் கல்வி, கணினி கல்வி, அகழ் ஆராய்வு படிப்பு, கடல் சார்ந்த கல்வியாளர்கள், மருத்துவ மாணவர்கள் நிச்சயமாக உயர்வான வகையில் கற்று தேர்ந்து அயல் தேசங்களில் தங்கள் திறமைக்கேற்ற பணிகளை மேற்கொள்வர், கற்று தந்த நம் தேசத்தையும் அதிகம் நேசிப்பவர்கள் இந்த எண் கொண்ட மாணவர்களே.