7, 16, 25
கேதுவின் ஆற்றல் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு சாதகமாகவும் ஏற்றம் உடையதாகவும் இருக்கும். மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறி ஸ்திரமாக முடிவெடுப்பீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான காலம் வந்துள்ளது. மகன், மகள் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்துவீர்கள். நண்பர்களிடையே கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.
மகள், மாப்பிள்ளை மூலம் அலைச்சல், செலவுகள் இருக்கும். பெண்கள் பழைய நகைகளை மாற்றி புது டிசைன் நகைகள் வாங்குவார்கள். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். தடைபட்டு வந்த நேர்த்தி கடன்கள், பரிகார பூஜைகளை இனிதே செய்து முடிப்பீர்கள். சொத்து விற்பது, வாங்குவது சம்பந்தமாக நிதானம், கவனம் தேவை. ஆவணங்களை சரிபார்ப்பது நலம் தரும். கன்னிப் பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது.
தாயார் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். அலுவலக வேலையாக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். புதிய ஏஜென்சி, பெரிய கான்ட்ராக்ட் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.
பரிகாரம்:
‘ஓம் கம் கணபதயே நம‘ என தியானிக்கலாம். முருகன் கோயிலுக்கு அபிஷேகத்துக்கு வேண்டிய பொருட்கள் வாங்கி தரலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவலாம்.