மேஷம்
இந்த புத்தாண்டில் சில காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும்.பெண்கள் சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவர். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும். கலைத்துறையினர் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினர் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்வதால் மனதில் தைரியம் அதிகரிக்கும்.