மீனம்
பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது நஷ்டங்களும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழிக்கு ஏற்ப நன்மை தீமைகளை பகுத்தறிந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களை கவருவீர்கள். குழந்தைகள் வழியில் முன்னேற்றங்கள் உண்டாகும்.தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: சித்தர்கள் கோயில்களுக்கு அடிக்கடி சென்று வர மனதில் தெளிவு பிறக்கும்.