ரிஷபம்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். புதிய ரகசியங்களை அறிவீர்கள். குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலையை முன்கோப பேச்சுகளால் கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அரசு வகையில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பூர்வீகச் சொத்துக்களை பாதுகாக்க சட்டப்படி நடவடிக்கைகளை எடுப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்கள் வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினர் சிறிய வேலையையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவர்.
பரிகாரம்: தினமும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்வதால் முக்கிய முடிவுகள் எடுக்க தெளிவு பிறக்கும்.