கடகம்
திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். நினைத்தது கைகூடும். உங்களை தவறாக புரிந்து கொண்டிருந்தவர்கள் உங்களை நாடி நட்பு கொள்வர்.சமூகத்தில் அதிகமான செல்வாக்கு உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வந்து சேரும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை, வீடு, நிலம், வாகனம் ஆகியவை வாங்கும் போகங்களும் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளை செய்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் இணைவர். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது.கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. பெண்களுக்கு மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. அரசியல்வாதிகளை பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் அம்பாள் போற்றிகள் படிப்பது வாழ்வில் துன்பத்தை கடக்க உதவும்.