விருச்சிகம்
பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். செய்தொழில் சிறக்கும்.எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். உடன்பிறந்தோர் அன்புடன் நடந்து கொள்வர். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். புதியவர்களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தன்னம்பிக்கையே தாரகமந்திரம் என்கிற ரீதியில் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பர்.அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும்.கலைத்துறையினர் பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கையை வழிபட வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.