சரம ஸ்லோகம் என்பது மந்திரம் அல்ல. இறந்தவர்கள் குறித்துச் சொல்லப்படுகின்ற துதி. அவ்வளவுதான். அதாவது இந்த வருடத்தில், இந்த மாதத்தில், இந்த நட்சத்திரம், திதி, கிழமை கூடிய நாளில் இந்த குலத்தில் வந்த மாமனிதர் இறைவனின் பாதத்தினைச் சென்றடைந்தார் என்ற பொருளுடன் சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகின்ற செய்யுளை சரம ஸ்லோகம் என்று அழைப்பார்கள். சட்டபூர்வமாக டெத் சர்ட்டிஃபிகேட் வாங்குவது போல் சாஸ்த்ரோக்தமாக வைதீகர் தரும் இறப்புச் சான்றிதழ்தான் இந்த சரம ஸ்லாகம். மற்றபடி இதனை திருமந்திரம் என்று சொல்வது கூடாது.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.