“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
காசி வந்த சொல்லியர் மேல்
காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்தது போம்.”
என்பது ஔவையின் வாக்கு. அதாவது மானம், குலம், கல்வி, வண்மை, அறிவு, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் ஆகிய பத்தும் பசி வந்தால் பறந்து போகும் என்பதே இதற்கான விளக்கம். ஆயினும் இந்தப் பசிப்பிணியைத் தீர்க்கும் வல்லமை நமது தமிழ் மாதத்தில் ஒன்றான ஐப்பசிக்கு உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வதைப் போல் ஐப்பசி வந்தால் பசியும் பறந்து போகும் என்று சொல்லலாம்.
முதலில் ஐப்பசி மாதத்தின் மகத்துவத்தைத் தெரிந்து கொண்டால் இதற்கான பொருள் முற்றிலுமாகப் புரியவரும். ஜோதிடவியலைப் பொறுத்தவரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் “ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது சூரியன் தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது.
ஐப்பசி என்றதும் தீபாவளி பண்டிகையே நம் எல்லோரின் மனக்கண் முன்னால் வந்து நின்று மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். வருடத்திற்கு ஒரு முறை வரும் தீபாவளி நம் இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் உதாரணத் திருநாள். கண்ணுக்குத் தெரியும் கடவுளாம் சூரியன் வலிமை இழந்திருக்கும் இந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய பண்டிகையா.. இது முரண்பாடாக உள்ளதே என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. சற்று விளக்கமாகக் காண்போம். தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்துக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
மூன்றாவதாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாளில் இருந்து ஆறுநாட்கள் தொடர்ந்து நடைபெறும் கந்தசஷ்டி விழாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். சூரபத்மனின் பெரும்படையோடு முருகப்பெருமான் போர்புரிந்த ஆறு நாட்களும் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆறாவது நாள் ஆன சஷ்டி அன்று சூரபத்மனின் வதம் நிகழ்கிறது. இவ்வாறாக ராவணன், நரகாசுரன், சூரபத்மன் என்று அசுரர்கள் அழிக்கப்பட்ட மாதம் இந்த ஐப்பசி மாதம் என்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இந்த ஐப்பசி மாதம் அமைந்துள்ளது.
கந்த சஷ்டிக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. அந்த நாளில் தாயாகிய சந்திரன் புத்திர காரகன் ஆகிய குருவின் வீட்டில் அதாவது தனுசு ராசியிலோ அல்லது அவரது வீட்டினைக் கடந்து மகர ராசியின் முதல் பாகத்திலோ அமர்ந்திருப்பார். குருவின் பலத்தினைப் பெறுவதோடு சூரியனுக்குரிய நட்சத்திரமான உத்திராடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் அது. “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்” என்ற பழமொழியை எண்ணிப்பாருங்கள். அதன் பொருள் இதுதான்.
சஷ்டியில் விரதம் இருந்தால் அகத்தில் உள்ள பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும்.... அதாவது சஷ்டி விரதம் புத்திர தோஷத்தை நீக்கி குழந்தை பாக்கியத்தைத் தரும் என்று பெரியவர்கள் விளக்கமளிப்பார்கள். அதனால்தான் கந்தசஷ்டியில் இருந்து விரதத்தினை ஆரம்பித்து தொடர்ச்சியாக ஒரு வருட காலம் பிரதி மாதம் வரும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள்ளாக கடுமையான புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டிவிடும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இதனாலேயே திருச்செந்தூர் புத்திர பாக்கியத்தினைத் தரும் குருவின் ஸ்தலமாகவும் விளங்குகிறது.
துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் கங்கைக்கு இணையான புண்ணிய நதியான காவேரியில் கங்கா தேவியானவள் பிரவாகிப்பதாக புராணங்கள் உரைக்கின்றன. தான் செய்த பாவங்களைக் கழிக்க எல்லோரும் கங்கையில் நீராடுகின்றனர். உலகத்தாரின் பாவ மூட்டைகளைச் சுமக்கும் கங்காதேவியானவள் அதிலிருந்து விடுபட்டு தன்னைப் பொலிவு ஆக்கிக்கொள்ள வேண்டி காவேரிக்கு வந்து ஸ்நானம் செய்யும் காலமே இந்த ஐப்பசி மாதம். கங்கா தேவியே தனது பாவத்தினைப் போக்கிக்கொள்ள காவேரியை நோக்கி ஓடிவருகிறாள் என்றால் நமது காவேரியின் மகத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமா..!
ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவதைக் காண்கிறோம். உத்தரகார
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.