குழந்தை பிறந்து ஒரு வயது கழித்து ஜாதகம் எழுத வேண்டும் என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள். ஆசை என்பது எப்பொழுது அந்தக்குழந்தையின் மனதில் உதிக்கிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பணியினைத் துவக்கிவிடுகின்றன. ஒரு பொம்மையை இறுகப் பிடித்துக்கொண்டு இது என்னுடையது என்று எப்பொழுது அந்தக்குழந்தை நினைக்கத் துவங்குகிறதோ அதிலிருந்தே வினைப்பயன் என்பது துவங்கிவிடுகிறது. நமது உடலில் அந்தராத்மா என்பது தனது செயல்பாட்டைத் துவக்கும்போது ஜாதகமும் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னதன் காரணமும் இதுவே. ஆசையைத் துறந்தவர்களுக்கு கிரஹங்களினால் பாதிப்பு இல்லை. துறவிகளுக்கும் சந்யாசிகளுக்கும் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் இதனால்தான். ஆக ஆசை என்ற ஒன்று எப்பொழுது மனதில் உதயமாகிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பலாபலன்களைத் துவக்கிவிடுகிறது என்பதே உங்கள் கேள்விக்கானபதில்.
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.