ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடு வதற்கு என்று ஒரு விதிமுறை உண்டு. அந்த விதிகளின்படி அந்த பண்டிகைகள் வருகின்ற நாட்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்பது சூரியன் துலாம் மாதத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி நாளில் கொண்டாடப்பட வேண்டும் என்பதே அதற்கான விதி. அதாவது ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முன்னர் வருகின்ற சதுர்த்தசி திதியானது அதிகாலை நேரத்தில் என்று வியாபித்திருக்கிறதோ, அந்த நாளே தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டிய நாள் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாலை நேரத்தில் செய்கின்ற ஸ்நானத்திற்கு நரக சதுர்த்தசி ஸ்நானம் என்று பெயர். அதாவது நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள் என்பதால் அவ்வாறு பெயர் பெற்றது. நரகாசுரன் இறைவனிடம் கேட்ட வரத்தின்படி அவனது இறப்பினை உலக மக்கள் யாவரும் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் பொங்கல் பண்டிகை என்பது சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது பயணத்தை துவங்குகின்ற உத்தராயணத்தின் முதல்நாள் கொண்டாட வேண்டிய பண்டிகை ஆகும். இந்தநாள் சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சூரியன் மகரத்திற்குள் நுழையும் நாளே தை மாதம் ஒன்றாம் தேதி. ஆக, இந்த நாள் எந்த வருடமும் மாறாமல் நிரந்தரமாக பொங்கல் பண்டிகை நாள் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை திருப்பி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்து முன்னேற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.