நிச்சயமாக இல்லை. மின்சார ஒளியில் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது தவறு. தீப ஜோதியில் இருந்து வரும் ஒளி வெள்ளத்தில்தான் இறைவனை தரிசிக்க வேண்டும். அதனால்தான் ஆலயத்தில் சந்நதியிலும் வீட்டில் பூஜையறையிலும் விளக்கேற்றி வைக்கிறார்கள். இறைவனை வணங்கும்போது மின்சாரம் தடைபட்டால் கூட அங்கே தீப ஒளி வீசிக் கொண்டிருப்பதால் சகுனத்தடை என்ற பேச்சிற்கே இடமில்லை. இறைவனை வணங்கும்போது மட்டுமல்ல, எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் அங்கே முதலில் விளக்கை ஏற்றி வைத்துவிட வேண்டும். திருமணம், க்ருஹப்ரவேசம், நிச்சயதார்த்தம் என எல்லா சடங்குகளின் போதும் அங்கே விளக்கு ஏற்றப்பட்டு ஒளி வீசிக் கொண்டிருக்கும் பட்சத்தில் மின்சாரம் தடைபட்டால் அதனை அபசகுனமாக கருத வேண்டிய அவசியமில்லை.
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.