விளக்கிற்கு ஏது முகம்? சாதாரணமாக ஒரு அகல் விளக்கினை ஏற்றி வைத்துப் பாருங்கள். அந்த விளக்கின் ஒளியானது எல்லா திசைகளிலும்தான் பரவும். கிழக்கு நோக்கி ஏற்றுகிறோம், வடக்கு நோக்கி ஏற்றுகிறோம் என்பதெல்லாம் நம் மனதில் தோன்றும் கற்பனையே. உண்மையின் விளக்கின் ஒளி அனைத்து திசைகளுக்கும் பரவுவதால் விளக்கிற்கு என்று முகம் கிடையாது. எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் விளக்கினை ஏற்றி வைக்கலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.