இது தவறான கருத்து. குருபார்வை இருந்து விட்டால் மட்டும் திருமணம் நடந்துவிடாது. அவரவர் ஜாதகத்தில் திருமண யோகம் என்பது எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் திருமணம் என்பது நடக்கும். குருபார்வை, குருபலம், வியாழ நோக்கம் என்று சொல்லப்படுகின்ற விஷயங்கள் அந்தந்த வயதினில் அவரவருக்கு தேவையான விஷயங்களை தடையின்றி நடத்தக்கூடிய வலிமையைத் தரும் அவ்வளவுதான். அதனால் குருபார்வை இருந்தால்தான் திருமணம் நடக்கும் என்பது சொல்வது தவறு. உதாரணத்திற்கு தற்பொழுது நடைபெற உள்ள குருபெயர்ச்சியினால் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய மூன்று ராசிகள் மட்டுமே குருவின் பார்வையைப் பெறுகின்றன. அதனால் இந்த மூன்று ராசியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே திருமணம் நடக்கும் என்று சொல்வது தவறு. அதேபோல மிதுன ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிலும், சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டிலும், கும்ப ராசிக்காரர்களுக்கு 12ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பார் என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் திருமண யோகம் கிடையாது என்றும் சொல்லக் கூடாது. திருமண யோகம் என்பது அவரவரது தனிப்பட்ட ஜாதக பலத்தினைப் பொறுத்தது. ஜாதகத்தில் நடைபெறும் தசாபுக்தி மட்டுமே திருமணம் நடக்க வேண்டிய காலத்தை நிர்ணயம் செய்யும். குருவின் பார்வை என்பது கூடுதலாக ஒரு உந்துதலைத் தரும். அவ்வளவுதான். அதனால் திருமண பாக்கியத்திற்கு குருபார்வை அவசியம் என்று சொல்லப்
படும் கருத்து தவறானதே. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.