முறைப்படி, ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் என்றால், கண்டிப்பாகக் கொடிமரம் இருக்க வேண்டும். சிமெண்ட், செங்கல் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிலைகள், வழிபாட்டிற்கு உகந்தவை அல்ல. மூலவர் கல்லால் அமைக்கப்படக் காரணம், ஒலி அதிர்வுகளைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும் ஆற்றல், கல்லிற்கு அதிகமாக உண்டு. அதனாலேயே, அடிக்கடி மந்திரங்கள் உச்சரிக்கப்படும் கருவறையில் உள்ள மூலவர் வடிவம், கல்லால் அமைக்கப் பட்டுள்ளது. அதிலும் முக்கியமான தகவல், பெண் தெய்வங்கள் என்றால், பெண் கல்லிலும்; ஆண் தெய்வங்கள் என்றால், ஆண் கல்லிலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். (கல்லிலும் ஆண்-பெண் உண்டு) அடிக்கடி மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு செய்யப்படும் மூலவர் திருமேனி, இதன் காரணமாகவே கல்லில் அமைக்கப்பட்டது.