மகப்பேறு என்பது, கொடுக்கல் - வாங்கல் அடிப்படையிலே அமைந்துள்ளது. அன்பைக் கொடுப்பதில் - அன்பைப் பெறுவதில்; தீமை செய்வதில் - தீமையைப் பெறுவதில்; செல்வம் கொடுப்பதில் - செல்வத்தைப் பெறுவதில்; எனப் பிறவிகள் அனைத்துமே, இந்தக் கொடுக்கல் - வாங்கல் அடிப்படையில்தான் அமைகின்றன. இதன் சூட்சுமம் நமக்குப் புரிவதில்லை.
இதைப் புரிய வைக்கவே ஞானநூல்கள், முனிவர்கள் சாபம் கொடுத்தார்கள்; இவர் அவருக்குப் பிள்ளையாகப் பிறந்தார்; இப்படியெல்லாம் செய்தார்; அதன் விளைவாகத் தெய்வமாக ஒருவர் வந்து அருள் செய்தார்; அல்லது தண்டித்தார், என்றெல்லாம் அந்த ஞானநூல்கள் சொல்கின்றன. அந்த ஞான நூல்கள் சொல்வது, இந்தக் கொடுக்கல் - வாங்கல் அடிப்படையிலேயே.