மேஷம்
மேஷம்: தைரிய ஸ்தானத்தில் இருந்த ராகு தனவாக்கு ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்தில் இருந்த கேது அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். ராகு கேது பெயர்ச்சி பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். அதே வேளையில் தன வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்ட கனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு: கேதுவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத் துறையினருக்கு: மனத்துணிவு அதிகரிக்கும். பண வரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு: இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.
மாணவர்களுக்கு: கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவச் செலவு உண்டாகலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் பன்னிரு கரத்தோனை வணங்குங்கள். துன்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
அதிர்ஷ்ட எண்கள் : 4, 5, 7, 9.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்ல வேண்டும்.