கும்பம்
கும்பம்: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த ராகு சுக ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்தில் இருந்த கேது தொழில் ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். ராகு கேது பெயர்ச்சியில் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும்.
அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.பெண்களுக்கு: அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். கலைத்துறையினருக்கு: வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும்.அரசியல்துறையினருக்கு: எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். மாணவர்களுக்கு: மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.
பரிகாரம்: விநாயக பெருமானை வணங்குங்கள். எல்லா தடைகளும் நீங்கும். உடலில் ஆரோக்யம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ ஓம் ஸ்ரீருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும்.