ரிஷபம்
ரிஷபம்: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்த ராகு, ராசிக்குள்ளும், அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்த கேது சப்தம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். பதினெட்டு வருடத்திற்குப் பிறகு ராசிக்கு வரும் ராகுவால் காரியத் தடை நீங்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். ஏழாமிடத்து கேதுவால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.
தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்னை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்றுக் கருத்து உண்டாகலாம். பெண்களுக்கு: திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத் தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கலைத்துறையினருக்கு: கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு: கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.
பரிகாரம்: லட்சுமி நாராயணனை வணங்குங்கள். துயரம் விலகும். வளங்கள் பெருகும்.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 2, 4, 7.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமகாலட்சுமி நம: என்று 11 முறை கூறவும்.