மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் இருந்த ராகு அயனசயன போக ஸ்தானத்திற்கும், சப்தம ஸ்தானத்தில் இருந்த கேது ரணருண ரோக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். ராகு கேது பெயர்ச்சியால் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் வரலாம். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசிப் பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி யிருக்கும். பங்குதாரர்களுடன் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்னைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.
பெண்களுக்கு: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.கலைத்துறையினருக்கு: கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும்.அரசியலில் உள்ளவர்களுக்கு: கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை ரத்தம் சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.