கடகம்
கடகம்: அயன சயன போக விரைய ஸ்தானத்தில் இருந்த ராகு லாப ஸ்தானத்திற்கும், ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த கேது பஞ்சம பூர்வ ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள்.ராகு கேது பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரியத் தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யம் கூடும். ஐந்தாமிடத்து கேதுவால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். பெண்களுக்கு: புத்திசாதூர்யம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம்.
பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு: கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு: கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.மாணவர்களுக்கு: கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்னைகள் வரலாம்.
பரிகாரம் : எல்லையில் இருக்கும் அம்பாளை வழிபடுங்கள். எல்லா துன்பங்களும் மாறும். எதிர்பார்த்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண்கள் : 2, 3, 6.
சொல்ல வேண்டிய மந்திரம் : ஓம் ஸ்ரீமாத்ரே நம: என்று தினமும் 21 முறை கூறவும்.