கன்னி
கன்னி: தொழில் ஸ்தானத்தில் இருந்த ராகு பாக்கிய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்தில் இருந்த கேது தைரிய வீர்ய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். ராகு கேது பெயர்ச்சியால் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படலாம். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். ஆனாலும் குரு லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். பெண்களுக்கு: வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.
கலைத்துறையினருக்கு: வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக்கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு: மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும்.
பரிகாரம் : நெய் அபிஷேகப்பிரியன் ஐயப்பனை வணங்கி வாருங்கள். நினைத்தது யாவும் நடக்கும். சிக்கலான பிரச்னைகளும் தீரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 9.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீகோவிந்தாய நம: என்று தினமும் 11 முறை கூறவும்.