விருச்சிகம்
விருச்சிகம்: அஷ்டம ஸ்தானத்தில் இருந்த ராகு சப்தம களத்திர ஸ்தானத்திற்கும், தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்த கேது ராசிக்கும் மாறுகிறார்கள். ராகு-கேது பெயர்ச்சியால் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சலும், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.
பெண்களுக்கு: சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.கலைத்துறையினருக்கு: வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும்.அரசியலில் உள்ளவர்களுக்கு: தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.மாணவர்களுக்கு: இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.உடல்நலனைப் பொறுத்தமட்டில் தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் வழிபடுங்கள். துயரங்கள் நீங்கும். துணிச்சல் ஓங்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9.
சொல்ல வேண்டிய மந்திரம் : தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லவும்.